ரூ.6,434/-க்கு நோக்கியா 2 : இதுதான் நோக்கியாவின் மிக மலிவான ஸ்மார்ட்போன்.!

நாளை அறிமுகமாகிறது நோக்கியாவின் மிக மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!

|

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் தொடர்ச்சியான அறிமுகங்களால் நோக்கியாவின் "மறுபிறவி" உறுதி செய்யப்பட்டது மட்டுமின்றி, இழந்த மாபெரும் சந்தையை மிகவும் குறுகிய காலத்திலேயே மீட்டு எடுத்துள்ளது; குறிப்பாக இந்திய சந்தையில் கணிசமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், ஸ்மார்ட்போன் தொலைபேசி சந்தையில் எட்டாவது இடத்தை நோக்கியா எட்டியுள்ளது.

இதுதான் இருப்பதிலேயே மலிவான  நோக்கியா ஸ்மார்ட்போன்!

இதுதான் இருப்பதிலேயே மலிவான நோக்கியா ஸ்மார்ட்போன்!

இந்நிலைப்பாட்டில் நாளை வெளியாகவுள்ள நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆனது நோக்கியாவின் விற்பனையை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நோக்கியா 2 தான் இதுவரை வெளியான நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் மலிவாதொரு கருவியாக இருக்கும்.

இந்தியாவில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்துகிறது.!

இந்தியாவில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்துகிறது.!

குறிப்பாக இந்தியாவில் உள்ள பட்ஜெட் அடிப்படையிலான நோக்கியா பிரியர்களுக்காகவே நோக்கியா 2 வெளியாகிறது என்று கூறலாம். நிறுவனம் இந்த சாதனத்தை இந்தியாவில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்துகிறது என்பதே அதற்கு சாட்சி. அதெல்லாம் சரி, நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் விலை என்ன.? அம்சங்கள் என்னென்ன.?

நாளை அக்டோபர் 31-ம் தேதி டெல்லியில் அறிமுகமாகிறது.!

நாளை அக்டோபர் 31-ம் தேதி டெல்லியில் அறிமுகமாகிறது.!

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆனது நாளை அக்டோபர் 31-ம் தேதி டெல்லியில் அறிமுகமாகிறது. ஆனால் குறிப்பிட்ட இடம் பற்றிய எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. ஆனால் வெளியாகும் புதிய சாதனமானது நோக்கியா ஸ்மார்ட்போன்களின் வரிசையில் ஒரு மைல்கல்லாக இருக்குமென நிறுவனம் கூறுகிறது.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான உள் சேமிப்பு.!

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான உள் சேமிப்பு.!

அன்டுனு பெஞ்ச்மார்க் சோதனையில் வெளிப்பட்ட நோக்கியா 2 ஆனது அதன் பெரும்பாலான அம்சங்களை வெளிப்படுத்தியது. அதன் படி, இயக்கருவியில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 212 சிப்செட் கொண்டு அட்ரெனோ 304 ஜிபியூ உடன் ஜோடியாக வெளிவரும் மற்றும் இது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான உள் சேமிப்பு கொண்டிருக்கும்.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.!

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.!

ஆச்சரியமான முறையில், இந்த பட்ஜெட் சாதனத்தில் ஒரு எச்டி டிஸ்பிளேவை நிறுவனம் அமைத்துள்ளது. கேமராவை பொறுத்தமட்டில், இந்த சாதனம் ஒரு 5எம்பி செல்பீ கேமரா மற்றும் ஒரு 8எம்பி முதன்மை கேமரா கொண்டிருக்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

நோக்கியா 2 விலை நிர்ணயம்

நோக்கியா 2 விலை நிர்ணயம்

தோராயமாக ரூ.6,434/- என்ற விலை நிர்ணயம் பெறுமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 7 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனும் இந்தியாவில் வெளியாகிறது. நோக்கியா 7 ஆனது, நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் மற்றொரு பட்ஜெட் மாறுபாடு என்ற கூறலாம். அதாவது நோக்கியா 8, சற்று விலை அதிகமாக உள்ளதென்று நினைப்பவர்கள் நோக்கியா 7 ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

கண்ணாடி பின்புற கேஸ் அமைப்பு

கண்ணாடி பின்புற கேஸ் அமைப்பு

எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடமிருந்து ஒரு கண்ணாடி பின்புற கேஸ் அமைப்புடன் வெளிவரும் முதல் தொலைபேசி நோக்கியா 7 ஆகும். நோக்கியா 6 ஆர்டி பதிப்பைப் போன்று பளபளப்பான அலுமினிய வடிவமைப்பை நோக்கியா 7 பெற்றுள்ளது. பார்ப்பதற்கே உற்சாமகளிக்கும் இந்த சாதனம் அதன் கண்ணாடி பின்புறத்தில் ஒரு 3டி கர்வுடு வடிவமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் அது அலுமினிய 7000 ப்ரேம்கள் செயல்முறையைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

4ஜிபி / 6ஜிபி என்ற இரண்டு வகை ரேம்

4ஜிபி / 6ஜிபி என்ற இரண்டு வகை ரேம்

நோக்கியா 7 முக்கிய வன்பொருள் அம்சங்களுடன் வருகிறது. இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4ஜிபி / 6ஜிபி என்ற இரண்டு வகை ரேம் மாதிரிகளில் வெளியாகியுள்ளது. இரண்டு ரேம் மாதிரிகளும் 64 ஜிபி என்ற உள்சேமிப்பு கொண்டுள்ளது. நோக்கியா 7 அந்த 5.2 இன்ச் என்ற அளவை கொண்ட 1080பி தீர்மான டிஸ்பிளே கொண்டுள்ளது உடன் ஒரு கொரில்லா கிளாஸ் 3 லேயரும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு ஓரியோ

இந்த தொலைபேசி அதன் ஆயுள்தன்மையை பிரதிபலிக்கும் வண்ணம் ஐபி54 கொண்டு மதிப்பிடப்படுகிறது. அதாவது இக்கருவி நீர் எதிர்ப்பு ஆதரவு கொண்டுள்ளது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி, வரவிருக்கும் மாதங்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ மேம்படுத்தல் பெறும்.

பொத்தீ

பொத்தீ

நோக்கியா 7 ஆனது பொத்தீ அம்சத்தை ஆதரிக்கிறது, அதாவது ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமராக்களை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டுள்ளது. நோக்கியா 8-ல் தான் இந்த அம்சத்தை நாம் முதலில் பார்த்தோம். இந்த அம்சத்தை செய்ஸ் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கம் செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், நோக்கியா 8 இரண்டு பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது ஆனால் நோக்கியா 7 ஒரே ஒரு ரியர் கேமராவுடன் தான் வருகிறதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

16 மெகாபிக்சல் சென்சார்

16 மெகாபிக்சல் சென்சார்

இதன் ரியர் கேமரா 1.12யூஎம் பிக்சல் அளவு கொண்ட 16 மெகாபிக்சல் சென்சார் பயன்படுத்துகிறது. இது எப்1.8 லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், நோக்கியா 7 ஒரு எப்2.0 லென்ஸ் பயன்படுத்தும் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. இதன் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ரூ.24,999 லிருந்து ரூ.26,999/-க்குள் ஒரு புள்ளியை பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அற்புதமான தொலைபேசி

அற்புதமான தொலைபேசி

மொத்தத்தில், நோக்கியா 7 ஒரு அற்புதமான தொலைபேசியாக தோன்றுகிறது. ஒரு வேகமான செயலி, ரேம் மற்றும் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி வழியிலான மெமரி நீட்டிப்பு, ஓஸோ ஆடியோ பதிவு போன்ற அம்சங்களுக்கான ஆதரவு ஆகியவைகளுடன் ஒரு நல்ல வன்பொருள் அம்சமும் கொண்டுள்ளது. மேலும் மிகவும் மெல்லிய பெஸல்கள், உலோக சட்ட மற்றும் பளபளப்பான கண்ணாடி என ஒரு கவர்ச்சிகரமான பிரீமியம் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. ஆக நிச்சயமாக இந்தியாவில் இந்த கருவி ஒரு அமோகமான வரவேற்பை பெறும்.

Best Mobiles in India

English summary
Nokia 2 AnTuTu listing confirms key specs, likely to launch in India on Oct 31. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X