போட்டிக் களத்துக்கு ஆயத்தமாகும் நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
போட்டிக் களத்துக்கு ஆயத்தமாகும் நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன்!

பல அற்புதமான படைப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறது நோக்கியா நிறுவனம். லுமியா-800 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கிய நோக்கியா நிறுவனம், லுமியா-900 மற்றும் லுமியா-910 என்ற ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நோக்கிய லுமியா-900 வைட் எடிஷன் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் அமோல்டு தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன். லுமியா-900 ஸ்மார்ட்போனும், லுமியா-800 ஸ்மார்ட்போன் போன்று சிறந்த தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும்.

நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன் விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் ஆற்றல் வாய்ந்த 1,830 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் சிறந்த தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையை பெரும் அளவில் கலக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்