Home
Mobile

அடடடே..! - மொபைல் வாங்கினால் ரூ.5000 கிஃப்ட் கார்ட்

நோக்கியா பிராண்ட் மொபைல் போன்கள் விற்பனைக்கும் உற்பத்தி செய்வதற்கு உரிமம் பெற்றுள்ள நிறுவனமான எச்எம்டி குளோபல் நோக்கியா மொபைல்களுக்கு ஆஃபர்களை அறிவித்துள்ளது. இந்த விற்பனைக் குறித்த தகவல் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.5000 கிஃப்ட் கார்டு

ரூ.5000 கிஃப்ட் கார்டு

நோக்கியா ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகப்படுத்தி மூன்று ஆண்டுகள் கடந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து நோக்கியா அறிவித்துள்ள குறிப்பிட்ட மொபைல் போன்கள் வாங்கும்போது ரூ.5000 மதிப்புள்ள பரிசு அட்டையைப் பெறலாம்.

இந்த மொபைலுக்கெல்லாம் ரூ.5000 பரிசு அட்டை

இந்த மொபைலுக்கெல்லாம் ரூ.5000 பரிசு அட்டை

நோக்கியா 7.2 (4 ஜிபி + 64 ஜிபி) மற்றும் (6 ஜிபி + 64 ஜிபி), நோக்கியா 5.1 பிளஸ் (6 ஜிபி + 64 ஜிபி) மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் (6 ஜிபி + 64 ஜிபி) வாங்கும்போது ரூ .5,000 பரிசு அட்டை கிடைக்கும்.

ரூ.4000, ரூ.2000 கிஃப்ட் கார்டுகள்

ரூ.4000, ரூ.2000 கிஃப்ட் கார்டுகள்

அதேபோல், நோக்கியா 6.2 (4 ஜிபி + 64 ஜிபி) ரூ .4,000 மதிப்புள்ள பரிசு அட்டை கிடைக்கும். இது தவிர, நோக்கியா 4.2 (3 ஜிபி + 32 ஜிபி), நோக்கியா 3.2 (3 ஜிபி + 32 ஜிபி) மற்றும் (2 ஜிபி + 16 ஜிபி), நோக்கியா 8.1 (4 ஜிபி + 64 ஜிபி), நோக்கியா 2.2 (3 ஜிபி + 32 ஜிபி) ஆகியவற்றில் ரூ.2,000 பரிசு அட்டை பெறலாம்.

GIFTCARD என்ற கூப்பனை பயன்படுத்தவும்

GIFTCARD என்ற கூப்பனை பயன்படுத்தவும்

இந்த சலுகை டிசம்பர் 1, 2019 வரை செல்லுபடியாகும். இந்த சலுகையை பயன்படுத்த வேண்டுமானால் "GIFTCARD" என்ற கூப்பன் கோடை பயன்படுத்த வேண்டும். இந்த கிஃப்ட் கார்ட்டை அடுத்த 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 நாட்களுக்குள் கூப்பன் வரும்

7 நாட்களுக்குள் கூப்பன் வரும்

இந்த மொபைல் போன் வாங்கிய 7 நாட்களுக்குள் கூப்பன் கார்டு இமெயிலில் அனுப்பப்படும். கடந்த வாரம், இந்த ஆண்டு டிசம்பரில் புதிய மாடல் மொபைல் போனை அறிமுகப்படுத்தப் போவதாக நோக்கியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இருப்பினும், புதிய மாடல் குறித்த பெயர் தற்போது வரை வெளிவரவில்லை. சில ஆன்லைன் அறிக்கைகளின்படி, நோக்கியா 8.2 வகை மாடலை அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நோக்கியா 8.1 மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

நோக்கியா 8.2 மாடல் அறிமுகமாக வாய்ப்பு

நோக்கியா 8.2 மாடல் அறிமுகமாக வாய்ப்பு

நோக்கியா 8.2 பற்றி நிறுவனம் எதுவும் வெளியிடவில்லை என்றாலும், முந்தைய அறிக்கைகள் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வசதியும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 700-சீரிஸ் செயலியில் மொபைல் இயங்கும் என்று வதந்தி பரவியுள்ளது. அதேபோல் இதில் 64 எம்பி கேமரா வசதி இருக்கக்கூடும் என்று தகவல்கள் கசிந்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Nokia Providing Rs 5,000 gift card For purchase of these phones!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X