Home
Mobile

விரைவில் புதிய விண்டோஸ் போனைக் களமிறக்கும் நோக்கியா!

By Karthikeyan
விரைவில் புதிய விண்டோஸ் போனைக் களமிறக்கும் நோக்கியா!

நோக்கியா தனது புதிய நவீன விண்டோஸ் 8 போனை வெகு விரையில் களமிறக்கப் போவதாக நோக்கியாவின் தலைமை இயங்குநர் ஸ்டீபன் இலோப் அறிவித்திருக்கிறார். இந்த புதிய விண்டோஸ் போன் ஆப்பிளின் புதிய ஐபோன் வருவதற்கு முன்பாக அதாவது வரும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் களமிறங்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

உலகச் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாகப் போராடிவரும் நோக்கியா இந்த புதிய விண்டோஸ் போன் மூலம் தன் இழந்த பெருமையை மீட்கலாம் என்று நம்புகிறது.

வரும் செப்டம்பர் 12ல் ஆப்பிள் தனது புதிய ஐபோனைக் களமிறக்குகிறது. அதனால் அதற்கு முன்பாகவே தனது விண்டோஸ் போனை களமிறக்குவதில் தீவிரமாக இருக்கிறது நோக்கியா.

இந்த ஆண்டின் 2வது காலாண்டில் மட்டும் 1.53 பில்லியன் ஈரோக்களை இழந்தது நோக்கியா. மேலும் இந்த காலக்கட்டத்தில் நோக்கியா தனது 4 மில்லியன் விணடோஸ் போன்களை மட்டுமே விற்க முடிந்தது.

ஆனால் அதே காலக்கட்டத்தில் ஆப்பிள் 26 மில்லியன் ஐபோன்களையும் சாம்சங் 50 மில்லியன் ஸ்மார்ட்போன்களையும் விற்றுத் தீர்த்து நோக்கியாவிற்கு கிலியை ஏற்படுத்தியது.

எனவே இந்த புதிய விண்டோஸ் போன் நோக்கியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று மிகவும் நம்பப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X