Home
Mobile

விண்டோஸ் போன் வரிசையை விரிவுபடுத்தும் நோக்கியா!

By Karthikeyan
விண்டோஸ் போன் வரிசையை விரிவுபடுத்தும் நோக்கியா!

நோக்கியா நிறுவனம் ஏற்கனவே தனது விண்டோஸ் போன் வரிசையில் லுமியா 800 மற்றும் லுமியா 710 ஆகிய போன்களை அறிமுகம் செய்த இருக்கிறது. இப்போது அந்த விண்டோஸ் போன் வரிசையில் மேலும் ஒரு புதிய போனை களம் இறக்குவதில் நோக்கியா மிகத் தீவிரமாக இருக்கிறது. இந்த புதிய போனிற்கு ப்ளூயிட் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த ப்ளூயிட் போன் க்வல்கம் சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்று ஒரு இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் இந்த புதிய போனைப் பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

நோக்கியா இதுவரை விண்டோஸ் போன் வரிசையில் லுமியா 710, லுமியா 800 மற்றும் லுமியா 900 ஆகிய 3 போன்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால் குறைந்த விலையில் லுமியா 610 என்ற புதிய மொபைலையும் நோக்கியா அறிமுகம் செய்யவிருக்கிறது என்ற தகவலும் வருகிறது.

இந்த லுமியா 610 மிகவும் குறைந்த விலையில் வரும். இந்த போன் 800 மெகா ஹெர்ட்ஸ் சினாப்ட்ராகன் எஸ்1 ப்ராசஸர், 256 எம்பி ரேம், 8ஜிபி சேமிப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.

அதுபோல் நோக்கியா தனது 4ஜி அல்லாத லுமியா 900 மொபைலையும் இந்தியாவில் விரைவில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய மொபைலின் விலை ரூ.31500 ஆக இருக்கும் என தெரிகிறது. குறிப்பாக இந்த மொபைல் சாம்சங் கேலக்ஸி எஸ் II மற்றும் ஆப்பிள் ஐபோன் 4எஸ்ஸுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X