Home
Mobile

Nokia ஆட்டம் ஆரம்பம்.. DSLR கேமராவுக்கே போட்டி.. ஸ்லிம்-ஆ ஸ்மார்ட்டா 5G Mobile ரெடி.. எப்போது அறிமுகம்?

நோக்கியா (Nokia) நிறுவனம் விரைவில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 200MP கேமராவுடன் (200MP camera) மிகவும் ஸ்லிம் (Slim) ஆன ஹேண்ட்செட் ஆக வெளிவரும் என்று வதந்திகள் வேகமாக பரவி வருகிறது.

நோக்கியா (Nokia brand Mobiles) நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நோக்கியா பிளே 2 மேக்ஸ் 5ஜி (Nokia Play 2 Max 5G) என்ற பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளதாக லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த வரவிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சாதனத்தின் கேமரா தரம் டிஎஸ்எல்ஆர் (DSLR) கேமராவுக்கு நிகரான அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Nokia ஆட்டம் ஆரம்பம்.. DSLR கேமராவுக்கே போட்டி.. ஸ்லிம் 5G Mobile ரெடி

நோக்கியா பிளே 2 மேக்ஸ் 5ஜி (Nokia Play 2 Max 5G):

ஆம், முதல் முறையாக டிஎஸ்எல்ஆர் கேமராவின் (DSLR camera) தரத்தை நோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் வழங்கவுள்ளது. அதுவும், குறிப்பிட்டு கூறும் படி, அதன் வரவிருக்கும் புதிய சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்லிம் மாடல் மொபைல் (slim mobile) டிவைஸாக வெளிவரும் என்றும் லீக் தகவல்களில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. மொபைல் சகாப்தத்தில் நோக்கியா நிறுவனம் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையான இடத்தை பெற்றுள்ளது.

இந்த காலத்திற்கு என்றார் போல, நோக்கியா தனது ஸ்மார்ட்போனை (Smartphone) மருவடிவைப்பு செய்து, அறிமுகம் செய்து வருகிறது. நோக்கியா பிரியர்களை (Nokia fans) கவரும் விதத்திலும், தற்போது உள்ள ஸ்மார்ட்போன் சந்தையில் நிகழும் போட்டியை சந்திக்கும் வகையில் நோக்கியா நிறுவனம் அதன் Nokia Play 2 Max 5G ஸ்மார்ட்போனை பார்த்துப்பார்த்து உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

வரவிருக்கும் இந்த புதிய சாதனம் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். வதந்திக்குள்ளாகியுள்ள நோக்கியா பிளே 2 மேக்ஸ் (Nokia Play 2 Max) பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகிறது. இந்த போனின் டிஸ்பிளே (display) 6.9" இன்ச் அளவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை (refresh rate) ஆதரிக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

Nokia ஆட்டம் ஆரம்பம்.. DSLR கேமராவுக்கே போட்டி.. ஸ்லிம் 5G Mobile ரெடி

DSLR கேமராவுக்கே போட்டியா? நோக்கியா பிளே 2 மேக்ஸ் 5ஜி (A competitor to a DSLR camera Nokia Play 2 Max 5G):

இந்த புதிய Nokia Play 2 Max 5G ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் உறுதியான டிஸ்பிளே பாதுகாப்பு அம்சத்தை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இது பெரும்பாலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning gorilla glass victus) பாதுகாப்பை பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இதில் மிகவும் சக்தி வாய்ந்த 5ஜி சிப்செட்டை நிறுவனம் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போனின் (Nokia 5G smartphone) முக்கியமான அம்சமாக இதன் ஸ்மார்ட் கேமரா பார்க்கப்படுகிறது. இது 200 மெகாபிக்ஸல் திறன் கொண்டதாக இருக்கும். இதன் துணை கேமரா 48 மெகாபிக்ஸல் கொண்டதாகவும், இதனுடன் 8 மெகாபிக்ஸல் கேமராவும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவொரு ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் கேமராவை கொண்டிருக்கும்.

இந்த புதிய நோக்கியா பிளே 2 மேக்ஸ் 5ஜி (Nokia Play 2 Max 5G) போன் 6000mAh பேட்டரியை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை பெரும் என்றும், இது முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள வெறும் 31 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்றும் லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அறிமுகம் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Play 2 Max 5G Comes With 200MP Camera Competitor to DSLR Camera With Slim Body Yet Powerful Mobile
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X