Home
Mobile

மைக்கிரோசாப்ட் ஏன் நோக்கியாவை வாங்கியது!!

By Prabakaran

மைக்கிரோசாப்ட் நிறுவனம் அண்மையில் நோக்கியா மொபைல் நிறுவனத்தை வாங்கியது நமக்கு தெரிந்ததே. மைக்கிரோசாப்ட் தன்னை வாங்குவதற்க்கு முன்பு நோக்கியா நிறுவனம் தனது லூமியா மாடல் ஸ்மார்ட்போன்களில் கூகுளின் ஆன்டிராய்ட் ஓஎஸ் உடன் வெளியிடும் முயற்ச்சியில் இருந்தததாம்.

நோக்கியா நிறுவனம் மைக்கிரோசாரப்டின் விண்டோஸ் மொபைல் ஓஎஸ்களை தான் தனது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வந்தது. நோக்கியாவுக்கும் மைக்கிரோசாப்டுக்குமான இந்த கான்டிராக்ட் முடியும் தருவாயில் தான் நோக்கியா அடுத்து தனது லூமியா ஸ்மார்ட்ரபோன்களை ஆன்டிராய்டில் வெளியிடலாமா என்ற எண்ணத்தில் அந்த முயற்ச்சியை தொடங்கியது.

மைக்கிரோசாப்ட் ஏன் நோக்கியாவை வாங்கியது!!

2014ல் நோக்கியா நிறுவனம் ஆன்டிாரய்ட் உடன் லூமியா ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம் என முடிவு செய்திருந்ததாம். ஆனால் அதற்க்கு முன் நோக்கியாவை மைக்கிரோசாப்ட் நிறுவனம் வாங்கிவிட்டது. மைக்கிரோசாப்டின் விண்டோஸ் ஓஎஸ்களை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் 85 சதிவீத ஸ்மார்ட்போன்கள் நோக்கியாவின் லூமியா ஸ்மார்ட்போன்கள் தான்.

சாம்சங், ஹச்டிசி போன்ற நிறுவனங்களின் விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் அது மக்களிடையே பிரபலமாகவில்லை. விண்டோஸ் மொபைல்கள் என்றாலே நோக்கியாவின் லூமியா மொபைல்கள் தான் எல்லோருடைய மனதிலும் தோன்றும்.

அப்படி இருக்ககையில் நோக்கியா நிறுவனமும் ஆன்டிராய்டிற்க்கு மாறிவிட்டால் மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ்களின் சகாப்தம் அத்துடன் முடிந்தது என்ற நிலை வந்து விடும். மைக்கிரோசாப்டின் மொபைல் ஓஎஸ்களுக்கு நோக்கியா லூமியா மிகவும் முக்கியமானதாக விளங்கியது.

மைக்கிரோசாப்ட் தனது மொபைல் ஓஎஸ்யை பிரபலமாக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அந்நிறுவனத்திற்க்கு நோக்கியா தேவை. அதனால்தான் மைக்கிரோசாப்ட் நோக்கியாவை வாங்கியது என்று ஊடகங்கள் சொல்கின்றன. இப்பொழுது நோக்கியா மைக்கிரோசாப்ட் கைவசம் இருப்பதால் நோக்கியாவின் ஆன்டிராய்ட் கனவு நடக்காமலேயே போய்விட்டது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X