கடைகளில் பணம் செலுத்தும் என்எப்சி தொழில்நுட்பத்துடன் நோக்கியா மொபைல்

Posted By: Staff
கடைகளில் பணம் செலுத்தும் என்எப்சி தொழில்நுட்பத்துடன் நோக்கியா மொபைல்

மொபைல் உலகில் பல தொழில் நுட்ப வளர்ச்சியை காட்டி வருகிறது நோக்கியா நிறுவனம். வாடிக்கையாளர்களின் வசதிகளை புரிந்து கொண்டு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் மொபைல்களை அறிமுகப்படுத்துவதற்கு நோக்கியா எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது.

இதனால், அந்த நிறுவனம் மார்க்கெட்டிலும், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதன் ரகசியம்.

இந்த வரிசையில், புதிய தொழில்நுட்ப வசதியுடன் புதிய மொபைலை வெளியிடுகிறது நோக்கியா.

நோக்கியா-900 ஏஸ் என்ற பெயரில் வரும்  இந்த மொபைல் விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும். இது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டுள்ளது.

அதோடு 4.3 இஞ்ச் திரையுடன் அமோல்டு திரை தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.

இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. லெட் ப்ளாஷ் வசதியியும் உள்ளது.

புளூடூத் வசதியிலேயே கூடுதலாக ஏ2டிபி வசதியையும் தருகிறது. வைபை தொழில் நுட்பத்தின் மூலம் எளிதான இன்டர்நெட்  இணைப்பையும் பெற முடியும்.

இதன் என்எப்சி தொழில் நுட்பத்தின் மூலம் கடைகளில் பணம் செலுத்த முடியும். வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும்.

நோக்கியா-900 ஏஸ் மொபைலில் உள்ள 1,800 எம்ஏஎச் பேட்டரி அதிக டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமை அளிக்கிறது.

நோக்கியா -900 ஏஸ் மொபைலின் தொழில் நுட்பம் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot