நோக்கியா போன்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு! எந்தெந்த போன்களுக்கு இது கிடைக்கும்?

|

எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா ஸ்மார்ட்போனுக்கான பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் விற்பனையைச் சலுகைகளுடன் துவங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் வாங்க கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்களுடன் பயனர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான கிஃப்ட் கார்டையும் வழங்குகிறது.

எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனத்தின் சிறப்பு சலுகை

எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனத்தின் சிறப்பு சலுகை

எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ், நோக்கியா 8.1, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 3.1 பிளஸ் மற்றும் நோக்கியா 2.2 ஆகிய மாடல்களுக்கு இந்த சிறப்பு சலுகையை வழங்கவுள்ளது.

ரூ.5,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு

ரூ.5,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு

நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ள சலுகையின் படி, நோக்கியா மொபைல் கடையில் இருந்து நோக்கியா ஸ்மார்ட்போனை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு மேலே குறிப்பிட்ட மாடல்களுடன் ரூ.5,000 வரை மதிப்பிலான கிஃப்ட் கார்டு வழங்கப்படும். இந்த சலுகை டிசம்பர் 01, 2019 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பயனர்களை பொறாமைப்பட செய்யும் ஏர்டெல் நிறுவனத்தின் பலே ப்ரீபெய்ட் திட்டங்கள்!ஜியோ பயனர்களை பொறாமைப்பட செய்யும் ஏர்டெல் நிறுவனத்தின் பலே ப்ரீபெய்ட் திட்டங்கள்!

30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் கிஃப்ட் கார்டு

30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் கிஃப்ட் கார்டு

மேலும், தற்போதைய வாங்குதலில் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து அடுத்து வாங்கும் நோக்கியா போனுடன் இந்த கிஃப்ட் கார்டு செல்லுபடியாகும். கூடுதலாக, கிஃப்ட் கார்டு வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சலுகை விபரம்

சலுகை விபரம்

நோக்கியா 7.2, நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் வாங்கும்போது ரூ.5,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு கிடைக்கும். மேலும், பயனர்கள் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.4,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு பெறுவார்கள். இது தவிர,நோக்கியா 8.1, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.1 பிளஸ் வாங்கினால் ரூ .2,000 மதிப்பிலான கிஃப்ட் கார்டு கிடைக்கும்.

இனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்இனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்

இரண்டு புதிய நோக்கியா போன்கள்

இரண்டு புதிய நோக்கியா போன்கள்

அதேபோல் எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் வரும் டிசம்பர் 5ம் தேதி இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நோக்கியா 8.2 மற்றும் நோக்கியா 2.3 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதால் பயனர்கள் இந்த கிஃப்ட் கார்டை இந்த போன்கள் வாங்கும் பொழுது பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Nokia Phones Annual Salebration With Rs.5000 Worth Gift Card : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X