பாவம் ப்ளாக்பெர்ரி; குவெர்ட்டி கீபேட் உடன் வெளியாகிறது அடுத்த நோக்கியா.!

|

குவெர்ட்டி கீபேட் காலம் திரும்புகிறது என்று கூறும்போதே குஷியாகிறது. அதுவும் நோக்கியா கருவிகளில் குவெர்ட்டி கீபேட் இடம்பெறவுள்ளது என்று கூறினால் அந்த குஷி இரட்டிப்பாகிறது.

பாவம் ப்ளாக்பெர்ரி; குவெர்ட்டி கீபேட் உடன் வெளியாகிறது அடுத்த நோக்கியா

சமீபத்திய செய்தி ஊடக தகவல்களின்படி, நோக்கியா நிறுவனம், குவெர்ட்டி கீபேட் உடன் ஒரு தொலைபேசியில் பணியாற்றிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. நோக்கியா பவர் யூசரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சமீபத்திய பட்டியலானது, தரசான்றிதழ் வலைத்தளமான எப்சிசி (FCC)-ல், டிஏ-1047 என்கிற மாடல் எண் கொண்ட கருவியாக வெளிப்பட்டுள்ளது.

இரட்டை சிம் ஆதரவு

இரட்டை சிம் ஆதரவு

கூறப்படும் நோக்கியா கைபேசியின் விவரங்கள் குறைவாக இருப்பினும் கூட அது மிகவும் வெளிப்படையாக ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்ட கருவியாக இருக்கிறது. உடன் 133 ×88 மிமீ என்கிற பரிமாணங்களை கொண்டிருக்கிறது.

நோக்கியா 2-வை விட சிறியது

நோக்கியா 2-வை விட சிறியது

பட்ஜெட் நட்பு ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 2-வை விட மிகவும் சிறியதாக இருக்கும் இயக்கருவி இந்தாண்டு வெளியான நோக்கியா 3310 (2017) கருவியின் அடுத்தக்கட்ட (அ) மேம்பட்ட பதிப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

நோக்கியா 9 ஆக இருக்க வாய்ப்பில்லை

நோக்கியா 9 ஆக இருக்க வாய்ப்பில்லை

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது, தொடர்ச்சியான முறையில் வதந்திகளாய் வெளிப்பட்டு கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் வெளியாகியுள்ள இந்த சாதனம், நோக்கியா நிறுவனத்தின் வேறு தொலைபேசியாக இருக்கலாமென்றும் யூகிக்கப்படுகிறது.

முழுமையான குவெர்ட்டி கீபேட்

முழுமையான குவெர்ட்டி கீபேட்

இந்த மர்மமான நோக்கியா கருவியின் உலகளாவிய கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்கள் நிச்சயமற்றதாக இருக்கும் மறுகையில் இக்கருவி ஒரு முழுமையான குவெர்ட்டி விசைப்பலகையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதென்ற சுவாரசியமான தகவல் வெளிப்பட்டுள்ளது.

விசித்திரமான நோக்கியா சாதனம்

விசித்திரமான நோக்கியா சாதனம்

ஆகமொத்தம், ஒரு நவீன நோக்கியா ஸ்மார்ட்போனில் சற்று பழைய பிளாக்பெர்ரி கீபேட்டை வைத்தாற் போல் ஒரு மொபைல் வெளிப்படலாம். இம்மாதிரியான விசித்திரமான நோக்கியா சாதனம் பற்றிய முதல் லீக்ஸ் தகவல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே , ஓஎஸ்

டிஸ்ப்ளே , ஓஎஸ்

எவ்வாறாயினும் வெளியான அறிக்கையின்படி இந்த நோக்கியா சாதனத்தில், ஒரு 3.3 இன்ச் அளவிலான 480x480 என்கிற பிக்சல் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளே இடம்பெறும் மற்றும் காய் ஓஎஸ் (Kai OS) மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 230 மூலம் இயக்கப்படும்.

நோக்கியா 3310 (2017) 4ஜி

நோக்கியா 3310 (2017) 4ஜி

கிஸ்மோ சீனாவின் மற்றொரு அறிக்கையானது, கூறப்படும் இந்த மர்மமான நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆண்டு வெளியான நோக்கியா 3310 கருவியின் 4ஜி பதிப்பாக இருக்கலாம் என்று கூறுகிறது.

சிறப்பானதொரு அப்டேட்

சிறப்பானதொரு அப்டேட்

வைஃபை மற்றும் 4ஜி இணைப்பு ஆதரவு கொண்டு, டிஏ-1047 என்கிற மாடல் எண்ணில் காணப்பட்டுள்ள சாதனம் ஒருவேளை நிஜமாகவே நோக்கியா 3310 சாதனத்தின் 4ஜி மாடலாக வெளியானால் இதை விட சிறப்பானதொரு அப்டேட் இருக்காது.

Best Mobiles in India

English summary
Nokia phone with QWERTY keyboard spotted; dual SIM device, gets FCC approval. Read more about this in Tamil gizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X