புதிய லூமியா போன்களின் விலையை அறிவித்த நோக்கியா

Posted By: Karthikeyan
புதிய லூமியா போன்களின் விலையை அறிவித்த நோக்கியா

நோக்கியா நிறுவனம் தனது லூமியா 920 மற்றும் லூமியா 820 ஆகிய ஸ்மார்ட்போன்களை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த நிலையில் ஐரோப்பாவில் இந்த போன்களை வாங்க விரும்புவோர் பிரீ ஆடர் செய்வதற்கான இவற்றின் விலையையும் தற்போது நோக்கியா அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

குறிப்பாக ரஷ்யாவில் லூமிய 920 போனை 801 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.42,597க்கு பிரீ ஆர்டர் செய்யலாம். அதே நேரத்தில் லூமியா 820ஐ வாங்க 640 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.34,000 செலுத்தி பிரீ ஆர்டர் செய்யலாம்.

ஜெர்மனியில் 836 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.44,458 செலுத்தி லூமியா 900 போனை பிரீ ஆர்டர் செய்யலாம். லூமியா 820 வாங்க 643 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 34,194 செலுத்தி பிரீ ஆர்டர் செய்யலாம்.

அதுபோல் இத்தாலியில் 771 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.41,000 செலுத்தி லூமியா 920ஐ ப்ரீ ஆர்டர் செய்யலாம்.

லூமியா 920, மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. அதே நேரத்தில் லூமியா 820, சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. இந்த நோக்கியா போன்களின் விலையைப் பார்க்கும் போது ஐபோன் 5 மற்றும் கேலக்ஸி III ஆகியவற்றை லூமியா போன்களைவிட குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot