செப்டம்பர் 22 வெளியாகிறது நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்?- பல்வேறு சிறப்பம்சங்கள்!

|

நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 22 ஆம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

எச்எம்டி குளோபல் அறிவிப்பு

எச்எம்டி குளோபல் அறிவிப்பு

எச்எம்டி குளோபல் செப்டம்பர் 22 ஆம் தேதி ஒரு வெளியீட்டு நிகழ்வை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வெளியீட்டு நிகழ்வுகளை போலவே, இந்த நிகழ்வும் நடைபெறும். இந்த நிகழ்வு நோக்கியாவின் மொபைல் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அடுத்த வாரம் வெளியிடப்பட இருக்கும் மொபைல்களின் பெயர்களை எச்எம்டி குளோபல் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிகழ்வின் போது நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 3.4 குறித்த தகவல் சமீபத்தில் பல முறை கசிந்துள்ளது. நோக்கியா 3.4 மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 22 வெளியீட்டு நிகழ்வு

செப்டம்பர் 22 வெளியீட்டு நிகழ்வு

வெளியீட்டு நிகழ்வு செப்டம்பர் 22 இரவு 8:30 மணி தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளியீட்டு நிகழ்வில் எச்எம்டி குளோபல் நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஐ அறிமுகப்படுத்தும் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நோக்கியா 2.4., 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை உள் சேமிப்புடன் வருகிறது. இது 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது.

நோக்கியா 3.4 குறித்த தகவல்

நோக்கியா 3.4 குறித்த தகவல்

நோக்கியா 3.4 குறித்த தகவல் முன்னதாக கசிந்த வண்ணம் இருந்தது. அதன்படி நோக்கியா 3.4 பின்புறத்தில் வட்ட கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் உள்ள கைரேகை சென்சாரும், ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும் எனவும் இடது புறத்தில் ஒரு பட்டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் ஒன்று கூகுள் அசிஸ்ட்டெண்டுக்கான பிரத்யேக பட்டன்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை!

 6.52 அங்குல டிஸ்ப்ளே

6.52 அங்குல டிஸ்ப்ளே

நோக்கியா 3.4 இல் 20: 9 விகிதத்துடன் 6.52 அங்குல (720x1,600) துளை-பஞ்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஸ்னாப்டிராகன் 460 SoC செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும். கூடுதலாக, இது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. உள் சேமிப்பு விருப்பங்கள் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய வேரியண்ட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு

பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு

பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு கொண்டிருக்கும். முதன்மை 13 மெகாபிக்சல் சென்சார், 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia New Model Smartphone May Launch On September 22: Here The Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X