நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் நோக்கியா என்-9

இந்த மொபைலில் மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் அதி நவீன வசதிகளை கொண்டிருக்கும்.
இந்த மொபைலில் கார்ல் சியஸ் ஆப்டிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, என்-9 மொபைல் உயர்ந்த ரக ஸ்மார்ட் மொபைல்களின் பட்டியலில் இடம்பெறும்.
புதிய பிஆர் 1.1 (வெர்ஷன் 13.016) அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஃபெர்ம்வேர் தொழில் நுட்பத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிய தொழில் நுட்பம் இந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், இதனை அனைவரும் எளிதாக இயக்கலாம்.
இதில் ஸ்வைப் கீபோர்டு சாப்ட்வேரை கொண்டுள்ளதால், வேகமாகவும், எளிதாகவும் டெக்ஸ்ட் இன்புட் வசதியை அளிக்கிறது.
நோக்கியா என்எஃப்சி டேக், மியூசிக் டேக், மொபைல் கேமிங் போன்ற வசதிகளையும் இதில் பயன்படுத்த முடியும்.
இந்த மொபைல் கண்களை கவரும் துல்லியத்துடன் புகைப்படத்தையும், வீடியோவையும் கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் தன்மை கொண்டது.
பிஆர்எல்1.2 தொழில் நுட்பமும் கூடிய விரைவில் வர இருப்பதாக தெரிகிறது.
புதிய தொழில் நுட்பத்தைக் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருக்கும், நோக்கியா என்-9 மொபைல் ரூ.30,000 விலையில் இருந்து ரூ.35,000 விலை வரையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications