ஆன்ட்ராய்டு வசதிகளை அள்ளிக்கொடுக்கும் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்

Posted By: Karthikeyan
ஆன்ட்ராய்டு வசதிகளை அள்ளிக்கொடுக்கும் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்

எதில் அதிக வசதிகள் உள்ளனவோ அதை தான் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதன் அடிப்படையில் அதிக வசதிகள் கிடைக்கும் ஸ்மார்ட் மொபைல் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கிறது.

நோக்கியா என்-12 என்ற ஸ்மார்ட்மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது நோக்கியா நிறுவனம்.

இந்த மொபைல் தனது வடிவமைப்பிலேயே ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த வித்தியாசமான வடிவமைப்பு பார்ப்பவர்களை நிச்சயம் பிரம்மிக்க வைக்கும்.

நோக்கியா என்-12 மொபைல் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இதன் 600 எம்எச்இசட் பிராசஸர் இந்த மொபைலின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க துணை புரிகிறது.

புளூடூத் மற்றும் வைபை தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளதால் எந்த தகவல்களையும் நண்பர்களுடன் பரிமாற்றிக் கொள்ளவும், கணினியில் உள்ளவற்றை பதிவேற்றம் செய்யவும் உதவும்.

இதன் 3.2 மெகா பிக்ஸல் கேமரா தறமான புகைப்படத்தைக் கொடுக்கும். நோக்கியா என்-12 மொபைலில் எம்எம்எஸ்,இ-மெயில் க்லெய்ன்ட் , ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வசதிகளையும் பெற முடியும். இது 512 எம்பி ரேம் கெப்பாசிட்டி கொண்டது.

இதன் மைக்ரோஎஸ்டி கார்டின் மூலம் 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். இதில் உள்ள லித்தியம் பேட்டரி 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 250 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறுகிறது.

எதிர் பார்க்க முடியாத அளவுக்கு அதிக தொழில் நுட்பம் கொடுக்கம் இந்த ஸ்மார்ட் மொபைலின் விலை ரூ.35,000 இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot