Home
Mobile

டீசரை வெளியிட்டது Nokia.. 50எம்பி கேமரா.. சும்மா படம் காட்ட போகுது இந்த 5ஜி போன்.. என்ன மாடல்?

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக அந்த டீசரில் புதிய மற்றும் வேகமான 5ஜி ஸ்மார்ட்போன் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கம்மி விலையில் நோக்கியா ஜி42 5ஜி எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் தான் விரைவில் கம்மி விலையில் இந்தியாவுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசரை வெளியிட்டது Nokia.. சும்மா படம் காட்ட போகுது இந்த 5ஜி போன்..

குறிப்பாக நோக்கியா ஜி42 5ஜி போன் உடன் நோக்கியா கம்ஃபோர்ட் இயர்பட்ஸ்+ (Nokia Comfort Earbuds+) இலவசமாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது நோக்கியா ஜி42 5ஜி போனின் அம்சங்களை பார்ப்போம்.

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G Specifications): ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்+ 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

டீசரை வெளியிட்டது Nokia.. சும்மா படம் காட்ட போகுது இந்த 5ஜி போன்..

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் 20 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா போன்.

5ஜி, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் உள்ளது. அதேபோல் OZO ஆடியோ அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஜி42 5ஜி போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த போன் கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Mobile India released new teaser: Nokia G42 5G phone is coming: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X