லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு?

Posted By: Staff
லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு?

விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்போனை புதிதாக அறிமுகம் செய்ய செய்ய நாளொன்றுக்கு ஒரு புதிய தகவல்கள் நோக்கியா நிறுவனம் பற்றி வெளியாகி கொண்டே இருக்கிறது.

லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. அதிலும் லுமியா-800 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்போது தான் லுமியா வரிசையில், லுமியா-920 மற்றும் லுமியா-820 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நோக்கியா நிறுவனம், தனது லுமியா-800 ஸ்மார்ட்போனிற்கு 15 சதவிகிதம் விலை குறைப்பு செய்வதாக தகவல்கள் கூறுகின்றது.

ஆனால் இது பற்றி நோக்கியா நிறுவனம் இன்னும் எந்தவிதமான தகவல்களையும் சரிவர வெளியிடவில்லை. நோக்கியாவின் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை, தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் நிறைய விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இனி நோக்கியாவின் புதிய விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் மூலம், ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா நிறுவனம் சிறந்த இடத்தினை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கொஞ்சம் பொருத்திருந்து நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு பற்றிய தகவல்களையும் பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot