மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் ஒரு Nokia போன்.! கசிந்தது அறிமுக தேதி.! அப்படி என்னதான் இருக்கு இதுல?
எச்எம்டி குளோபல் நிறுவனம் தரமான நோக்கியா போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒவ்வொரு நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது மற்ற நிறுவனங்களின் போன்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட செயல்திறன் உடன் வெளிவருகின்றன நோக்கியா போன்கள்.
இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா மேஜிக் மேக்ஸ் (Nokia Magic Max) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நோக்கியா மேஜிக் மேக்ஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த புதிய போனின் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ தேதியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஐபோன்களுக்கு போட்டியாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நோக்கியா மேஜிக் மேக்ஸ் போன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குவால்காமின் லேட்டஸ்ட் ஹை-எண்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) ப்ராசஸர் கொண்டு இந்த புதிய நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த புதிய நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 8ஜிபி/12ஜிபி/ 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.
144எம்பி மெயின் சென்சார் + 64எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

நீண்ட நேரம் பேக்கப் தரக்கூடிய பேட்டரி வசதி இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனில் 180 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் ஆதரவுடன் அறிமுகமாகும்.
நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக இருப்பதால், இதன் விலையும் சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








