Home
Mobile

7,500mAh பேட்டரி.. 108எம்பி கேமரா.. இந்த Nokia போனை யாரு விடுவா? அறிமுகம் எப்போது தெரியுமா?

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனித்துவமான நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக 4ஜி போன்களை மட்டுமே அறிமுகம் செய்துவந்த இந்நிறுவனம், தற்போது மெல்ல மெல்ல 5ஜி போன்களையும் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் இந்நிறுவனம் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில் மீண்டும் ஒரு அட்டகாசமான நோக்கியா போனை அறிமுகம் செய்ய உள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதாவது நோக்கியா மேஜிக் மேக்ஸ் (Nokia Magic Max) என்ற ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

7,500mAh பேட்டரி.. 108எம்பி கேமரா.. இந்த Nokia போனை யாரு விடுவா?

அதாவது இணையதளத்தில் கசிந்த தகவலின்படி, இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், தரமான கேமரா மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக செல்பி கேமராவுக்கு என்றே பஞ்ச்-ஹோல் கட் அவுட்(punch-hole cut out) வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸனாப்டிராகன் 8 ஜென் 2 (octa-core Snapdragon 8 Gen 2) சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது வீடியோ எடிட்டிங், கேமிங் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த சிப்செட் மிக அருமையாகப் பயன்படும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி மெயின் சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 64எம்பி கேமராவுடன் இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். அதேபோல் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

7,500mAh பேட்டரி.. 108எம்பி கேமரா.. இந்த Nokia போனை யாரு விடுவா?

சாம்சங் ஸ்மார்ட்போன்களை விட தரமான பேட்டரி வசதியுடன் இந்த நோக்கிய மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது இந்த நோக்கியா போனில் 7500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதிக்கு தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி, ஜிபிஎஸ், புளூடூத் வி5.2 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கிய மேஜிக் மேக்ஸ் போன். பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரூ.49,999-விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும் நோக்கியா மேஜிக் மேக்ஸ் போனின் வெளியீட்டுத் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை எச்எம்டி குளோபல் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Magic Max phone with 108MP camera to launch soon: Price and specifications leaked online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X