Home
Mobile

7950mAh பேட்டரி.. 200MP கேமரா.. மொத்த இந்தியாவும் போட்டி போட்டு வாங்கும்.. Nokia Magic Max எப்போ வரும்?

எச்எம்டி நிறுவனம் எச்எம்டி பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆனாலும் இந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவில்லை. அவ்வப்போது புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்து வருகிறது இந்நிறுவனம்.

குறிப்பாக நோக்கியா போன்களுக்கு இப்போது கூட இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தரம் தான். அதாவது தரமான நோக்கியா போன்களை அறிமுகம் செய்கிறது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்நிலையில் நோக்கியா மேஜிக் மேக்ஸ் (Nokia Magic Max) என்ற போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

இந்த Nokia போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 7950mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதாவது இந்தியாவில் நோக்கியா மேஜிக் மேக்ஸ் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் அதிக வரவேற்பு இருக்கும். மேலும் ஆன்லைனில் வெளியான நோக்கியா மேஜிக் மேக்ஸ் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா மேஜிக் மேக்ஸ் அம்சங்கள்: (Nokia Magic Max specifications): 6.7-இன்ச் அமோலெட் ( AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது நோக்கியா மேஜிக் மேக்ஸ் போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 அல்லது ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் நோக்கியா மேஜிக் மேக்ஸ் போன் விற்பனைக்கு வரும்.

200எம்பி பிரைமரி கேமரா + 64எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் நோக்கியா மேஜிக் மேக்ஸ் போனில் உள்ளன. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் ஆதரவுடன் நோக்கியா மேஜிக் மேக்ஸ் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

இந்த Nokia போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 7950mAh பேட்டரி.. எந்த மாடல்?

7950mAh பேட்டரி வசதியுடன் நோக்கியா மேஜிக் மேக்ஸ் போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 180 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா மேஜிக் மேக்ஸ் போனின் விலை குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Magic Max chipset and battery details revealed: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X