உலகையே திரும்பி பார்க்க வைக்கும் புதிய Nokia போன்: என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? இதோ முழு விவரம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் இதுவரை குறைந்த விலை அல்லது பட்ஜெட் விலை நோக்கியா போன்களை தான் அதிகமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில் சற்று உய்வான விலையில் நோக்கியா போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
அதாவது நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். குறிப்பாக இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போன் தரமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றி தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

அதன்படி மெல்லிய பெசல்களைக் கொண்ட ஒரு பிளாட் டிஸ்பிளேவுடன் இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 மாடல் (Nokia Magic Max 2023) அறிமுகமாகும். பின்பு ஐபோனில் இடம்பெற்றுள்ள கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஐபோன் வடிவமைப்பை போன்றே உள்ளது இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 மாடல்.
ஆனாலும் இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போன் ஆனது குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
பெரிய டிஸ்பிளே கொண்டு இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. மேலும் இந்த போன் 64எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 108எம்பி மெயின் சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) ப்ராசஸர் கொண்டு இந்த புதிய நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போன் 7500 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் என வதந்தி பரவுகிறது. ஆனால் 5000 அல்லது 5500 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போன் அறிமுகமாகும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போன் அறிமுகமாகும்.

குறிப்பாக இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போனில் 5ஜி ஆதரவு உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த நோக்கியா போன் அறிமுகமாகும். ஏற்கனவே இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை நோக்கியா மேஜிக் மேக்ஸ் 2023 போனின் அறிமுகம் குறித்தும் மற்றும் அதன் விலை குறித்தும் எந்த தகவலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிடவில்லை.இருந்தபோதிலும் இந்த புதிய போனின் அறிமுகம் குறித்து விரைவில் தகவல் தெரியவரும்.


Click it and Unblock the Notifications








