நோக்கியா vs சாம்சங்

|

இந்தியாவில் எப்பொழுதும் நோக்கியா மொபைல் போன்களுக்கு ஒரு மவுசு உண்டு. செகண்ட் ஹேண்ட் மொபைல் வாங்கினாலும் நோக்கியா மொபைலாக வாங்கனும் என்ற கருத்தும் ஒரு காலத்தில் இருந்தது.

ஆனால், சாம்சங்கின் வரவுக்கு பிறகு அந்த நிலமை மாறியது. இந்தியாவில் சாம்சங்கின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது.

ஸ்மார்ட்போன் உலகில் சாம்சங் நம்பர் 1 ஆக இருக்கிறது. நோக்கியாவை சாம்சங் பின்னுக்கு தள்ளியது. பேசிக் மாடல் மொபைல்களில் மட்டுமே நோக்கியா ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

ஸ்மார்ட்போன் என எடுத்துக்கொண்டால் இரு நிறுவனங்களிலும் நிறைய மாடல்கள் உள்ளன. நாம் இப்பொழுது நோக்கியா லுமியா720 மற்றும் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் கூவாட்ரோ மொபைல்களில் எது சிறந்தது என்று பார்ப்போம்.

நோக்கியா லுமியா720 vs சாம்சங் கேலக்ஸி கிராண்ட் கூவாட்ரோ கேலரி

நோக்கியா vs சாம்சங்
டிஸ்பிளே

நோக்கியா லுமியா720 4.3 இன்ஞ் டிஸ்பிளே 480*800 பிக்சல் ரெசலுயுசன் 217பிபிஐ கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி கிராண்ட் கூவாட்ரோ 4.7 இன்ஞ் டிஸ்பிளே 480*800 பிக்சல் ரெசலுயுசன் 199பிபிஐ கொண்டுள்ளது. சாம்சங்கில் பெரிய டிஸ்பிளே இருந்தாலும் டெக்னிக்கலாக பார்க்கும் பொழுது நோக்கியாவே சிறந்தது.

டைமென்சன்ஸ்

127.9 x 67.5 x 9 mm (நோக்கியா லுமியா720)

133.3 x 70.7 x 9.7 mm (சாம்சங் கேலக்ஸி கிராண்ட் கூவாட்ரோ)

ஆப்ரேட்டிங் சிஸ்டம்(OS)

நோக்கியா லுமியா720யில் விண்டோஸ் போன்8 ஓஎஸ் உள்ளது. சாம்சங் கேலக்ஸி கிராண்ட் கூவாட்ரோ ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ் உடன் கூவாட் கோர் பிராசஸர் கொண்டுள்ளது.

விண்டோஸ் போன்8ல் அப்பிளிகேசன் அதிக அளவில் இல்லாததே அதன் மிக பெரி. குறையாகும்.

டிவைஸ் பிராசஸர் இண்டர்னல் மெமரி

நோக்கியா லுமியா720 1 GHz டியுல் கோர் பிராசஸர் 8ஜிபி(to 64ஜிபி )

சாம்சங் கேலக்ஸி கூவாட்ரோ 1.2 GHz கூவாட் கோர் பிராசஸர் 8ஜிபி(to 32ஜிபி )

கேமரா

நோக்கியா லுமியா720யில் 6.7 மெகாபிக்சல் கேமரா எல்ஈடி பிளாஷ் மற்றும் 1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளது. சாம்சங் கேலக்ஸி கூவாட்ரோ 5 மெகாபிக்சல் கேமரா எல்ஈடி பிளாஷ் மற்றும் விஜிஏ பிரண்ட் கேமரா கொண்டுள்ளது. இதில் நோக்கியாவே சிறந்தது.

ஒயர்லெஸ் சார்ஜிங்

நோக்கியா லுமியா720யில் ஒயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. சாம்சங் கேலக்ஸி கூவாட்ரோவில் இந்த வசதி இல்லை.

பேட்டரி

நோக்கியா லுமியா720யில் 2000 mAh பேட்டரி உள்ளது. இதில் உள்ள பேட்டரியை மாற்ற முடியாது. சாம்சங் கேலக்ஸி கூவாட்ரோ 2000 mAh பேட்டரி கொண்டுள்ளது. இதில் உள்ள பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம்.

விலை

நீங்கள் தெளிவான கேமரா மற்றும் சிறந்த போன் வாங்க வேண்டும் என்றால் நோக்கியா லுமியா720யை வாங்கலாம் இதன் விலை RS.18,094. உங்களுக்கு அப்பிளிகேசன் அதிக அளவில் வேண்டும் என்றால் சாம்சங் கேலக்ஸி கூவாட்ரோ வாங்கலாம் இதன் விலை RS.16,299.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X