நோக்கியாவின் அடுத்த சூறாவளி

|

மொபைல் உலகில் தனெக்கென ஒரு தனி சாம்ராஜியமே படைத்துள்ளது நோக்கியா நிறுவனம். அதனால் தான் என்னவோ உலகமே தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 41 மெகாபிக்சல் கேமிரா கொண்ட நோக்கியா ஈஓஎஸ்(EOS)யை எதிர்பார்த்து உள்ளது.

நோக்கியா ஈஓஎஸ்ன் இன்னொரு பரிமாணமாக அலுமினியத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட மொபைல் வரும் என்று நிறுவனத்தினர் நம்புகின்றனர். ஆனால் நோக்கியா ஈஓஎஸ்ன் சிறப்பு அம்சமாக 41 மெகாபிக்சல் கேமிராவே அமையும்.


ஒரு சில தினங்களுககு முன் ஹவாய் நிறுவனம் உலகத்திலே மெளிதான மொபைல் ஆன அசண்ட் பி6 யை வெளியிட்டது. அது சிறந்த தரம் மற்றும் வடிவமைப்பிற்க்காக எல்லோரது பாராட்டையும் பெற்றது. இதன் காரணமாகவே நோக்கியா தனது ஈஓஎஸ் யை புதிய அம்சங்களுடன் தயாரித்து முன்னனியில் வர ஆயித்தமாகிறது எனலாம்.


நோக்கியா தனது ஈஓஎஸ் யை விண்டோஸ் போன் 8 (WP8) உடன் வெளியிடுமா என்பதை பற்றிய தகவல் எதுவும் வெளியிடவில்லை. ஆனால், நோக்கியா ஈஓஎஸ் பல வண்ணங்களில் வெளிவரும் என்பதற்கான கூற்று அதன் விளம்பர அறிக்கையில் தெரிகிறது.

நோக்கியா ஈஓஎஸ் 41 மெகாபிக்சல் கேமிரா, 4.5 இன்ஞ் அமோலெட் 720p HD ரெசலுசன் திரை,32ஜிபி இண்டர்னல் மெமரி, நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி போன்ற சிறப்பு அம்சங்களுடன் வெளிவர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழே நோக்கியா ஈஓஎஸ் பற்றிய படங்களும் மற்றும் அதனுள் எதிர்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்களும் உள்ளது.

Click Here For New Smartphones Gallery

நோக்கியா ஈஓஎஸ்- 41 மெகாபிக்சல் கேமிரா

நோக்கியா ஈஓஎஸ்- 41 மெகாபிக்சல் கேமிரா

நோக்கியா ஈஓஎஸ் 41 மெகாபிக்சல் கேமிரா மொபைல் விரைவில் வெளிவர உள்ளது.

நோக்கியா ஈஓஎஸ்- மெட்டாலிக் பாடி

நோக்கியா ஈஓஎஸ்- மெட்டாலிக் பாடி

நோக்கியா ஈஓஎஸ், லுமியா 925 விட மெளிதாகவும் மெட்டாலிக் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய தோற்றத்துடன் வெளிவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா ஈஓஎஸ்-டிஸ்பிளே

நோக்கியா ஈஓஎஸ்-டிஸ்பிளே

நோக்கியா ஈஓஎஸ் 4.5 இன்ஞ் அமோலெட் எல்சிடி டிஸ்பிளே உடன் இருக்கக் கூடும்.

நோக்கியா ஈஓஎஸ்-பிராசஸர்

நோக்கியா ஈஓஎஸ்-பிராசஸர்

நோக்கியா ஈஓஎஸ் கூவாட் கோர் பிராசஸரை கொண்டு வெளிவரலாம் ஆனால் அதனை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

நோக்கியா ஈஓஎஸ்-விண்டோஸ் போன் 8

நோக்கியா ஈஓஎஸ்-விண்டோஸ் போன் 8

நோக்கியா ஈஓஎஸ் விண்டோஸ் போன் 8 GDR2 அப்டேட் உடன் வெளிவரக் கூடும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X