மனதை மயக்கும் வண்ணங்களில் நோக்கியாவின் புதிய லூமியா போன்கள்

Posted By: Karthikeyan
மனதை மயக்கும் வண்ணங்களில் நோக்கியாவின் புதிய லூமியா போன்கள்

நோக்கியாவின் லூமிய ஸ்மார்ட்போன்களுக்கு உலக அளவில் மக்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு நிலவுகிறது. அதனைத் தொடந்து நோக்கியா நிறுவனம் தனது லூமியா போன் வரிசையில் பல புதிய போன்களை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது.

அந்த வகையில் லூமியா 920 மற்றும் லூமியா 820 ஆகிய புதிய போன்கள் இன்னும் 24 மணி நேரத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே ஒருவர் தனது டிவீட்டர் தளத்தில் லூமியா 920 போன் 5 வண்ணங்களில் வர இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதாவது இந்த புதிய லூமியா 920 போன், சிவப்பு, மஞ்சள், வெள்ளை, க்ரே மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வர இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதன் உண்மையா என்பது வெகு விரைவில் தெரிந்துவிடும்.

அதே நேரத்தில் லூமியா 820 போனின் படமும் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த போன் பர்ப்புள் நிறத்தில் வருகிறது. அதோடு இந்த போன் கார்ல் சிஸ் லென்ஸ் மற்றும் ப்ளாஷோடு வருகிறது. மேலும் இதன் பின்பக்கத்தை மாற்றவும் கூடிய வகையில் இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot