Home
Mobile

லுமியா-920 மற்றும் ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
லுமியா-920 மற்றும் ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போன் மற்றும் சாம்சங் ஏட்டிவ் எஸ் ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிறிய ஒப்பீடு.

லுமியா-920 ஸ்மார்ட்போன் 185 கிராம் எடையினையும், சாம்சங் ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன் 135 எடையினை கொண்டதாக இருக்கும். லுமியா ஸ்மார்ட்போனையும் விட ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போனின் எடை சற்று குறைந்ததாக இருக்கும். லுமியா-920 ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் திரை வசதியின் மூலம் ஐபிஎஸ் திரை துல்லியத்தினை வழங்கும். இதில் 768 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் திரையினை விடவும் சாம்சங் ஏவிட் எஸ் ஸ்மார்ட்போனின் திரை கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

சாம்சங் ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். இதில் இருந்து கிடைக்கும் துல்லியமும் உயர்ந்ததாக தான் இருக்கும். 1280 X 720 திரை துல்லியத்தினை வழங்கும். இதன் திரைக்கு கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷனும் வழங்கப்படும்.குவால்காம் எம்எஸ்எம்-8960 ஸ்னாப்டிராகன் சிப்செட், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் க்ரெய்ட் வேகத்தில் இயங்கும் பிராசஸர் போன்றவற்றை இதில் பெறலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும். லுமியா-920 ஸ்மார்ட்போன் 8.7 மெகா பிக்ஸல் ப்யூர்வியூ கேமராவினையும், 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொடுக்கும்.

ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் மற்றும் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வழங்கும். இதனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டியூவல் கேமரா வசதியினை பெறலாம்.

லுமியா-920 ஸ்மார்ட்போன் 2,000 எம்ஏஎச் பேட்டரியினையும், ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன் 2,300 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன்களை பெற அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X