Home
Mobile

மோட்டோ மற்றும் நோக்கியாவில் சிறப்பு ஒப்பீடு!

By Super
மோட்டோ மற்றும் நோக்கியாவில் சிறப்பு ஒப்பீடு!

சமீபத்தில் மொபைல் உலகத்தில் இரு பெரும் ஜாம்பவான்களாகிய நோக்கியா மற்றும் மோட்டோரோலா, புதிய ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா லுமியா-920 மற்றும் லுமியா-820 என்ற புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

மோட்டரோலா நிறுவனமும் தனது ட்ராய்டு ரேசர் எச்டி, ட்ராய்டு ரேசர் மேக்ஸ் மற்றும் ட்ராய்டு ரேசர் எம் என்ற 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதில் லுமியா-920 மற்றும் மோட்டோரோலா ட்ராய்டு ரேசர் எம் என்ற இந்த 2 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தொழில் நுட்ப ஒப்பீட்டினை பார்க்கலாம்.

லுமியா-920 ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டு இயங்கும். மோட்டோரோலா ட்ராய்டு ரேசர் எம் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் நோக்கியாவின் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன், மோட்டோரோலாவின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக இருக்குமா? என்று பார்க்கலாம்.

ட்ராய்டு ரேசர் எம் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையினையும், லுமியா-920 ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாகவும் இருக்கும். லுமியா-920 ஸ்மார்ட்போனின் திரை, மோட்டோ ட்ராய்டு ரேசர் எம் ஸ்மார்ட்போனை விட குறைந்ததாக இருப்பினும், துல்லியம் அதிகம் கொண்டதாக இருக்கும்.

லுமியா-920 ஸ்மார்ட்போன் 1.2 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை கொண்டதாக மட்டும் இல்லாமல், 8.7 இஞ்ச் திரையினை கொண்டதாக இருக்கும். ட்ராய்டு ரேசர் எம் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் மெயின் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வழங்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே, 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே 2,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொடுக்கும். இதனால் சிறப்பான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினையும் எளிதாக பெறலாம். இந்த ஸ்மார்ட்போன்களின் விலை வெளியான பின்பு, விலையை வைத்தும் ஒரு ஒப்பீடு பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X