Home
Mobile

விண்டோஸ் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!

விண்டோஸ் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!

நோக்கியா லுமியா-920 மற்றும் எல்ஜி நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு பற்றி இங்கே பார்க்கலாம். இதில் நெக்சஸ்-4 என்ற இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன். இதனால் நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனுக்கு, எல்ஜி-4 ஸ்மார்ட்போன் ஈடுகொடுக்குமா? என்பதை இந்த ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்பங்களின் ஒப்பீட்டில் பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் லுமியா-920 ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாக இருக்கும். எல்ஜி நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டின் லேட்டஸ்டு வெர்ஷனான 4.2 இயங்குதளத்தில் இயங்கும். இந்த லுமியா-920 ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் திரை மற்றும் 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் ஐபிஎஸ் திரை தொழில் நுட்பத்தினை வழங்குவதாக இருக்கும். இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இருக்கும் டியூவல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 ப்ரோ பிராசஸர் வசதியினை கொடுக்கும்.

லுமியா-920 ஸ்மார்ட்போனின் 8.7 மெகா பிக்ஸல் கேமராவில், லெட் ஃபிளாஷ் ஆட்டோஃபோக்கஸ் ஸ்மார்ட்போன் 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் அளிக்கும். இதனால் இந்த ஸ்மார்ட்போன் கொண்டு சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் போன்ற வசதிக்களை பெறலாம்.

நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை சிறப்பாக வழங்கும். நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனில் கூடுதலாக சில சிறப்பு வசதிகளையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் என்எப்சி மற்றும் ஸ்கைட்ரைவ் ஸ்டோரேஜ், 8ஜிபி மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியை அளிக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே வைபை, ப்ளூடூத் மற்றும் என்எப்சி ஆகிய வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும். லுமியா-920 ஸ்மார்ட்போனில் 2,000 எம்ஏஎச் பிபி-4-ஜிடபிள்யூ பேட்டரியினையும் மற்றும் நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனில் 2,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பாலிமர் பேட்டரியினையும் வழங்கும்.

லுமியா-920 ஸ்மார்ட்போனை ரூ. 34,000 ஒட்டிய விலையிலும் மற்றும் நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனை ரூ. 20,000 ஒட்டிய விலையிலும் பெறலாம். இந்த செய்தியினை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் இந்த பக்கத்தில் படிக்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X