Home
Mobile

இந்தியாவிற்கு வர காலம் தாழ்த்தும் லூமியா 920 ஸ்மார்ட்போன்

By Karthikeyan
இந்தியாவிற்கு வர காலம் தாழ்த்தும் லூமியா 920 ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனம் தனது லூமியா 920 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்த நவம்பரில் களமிறக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தது. விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் இந்த போன் இந்த நவம்பரில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வராது என்று தற்போது பல இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த போன் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் தேதியையும் இந்த செய்திகள் தெரிவிக்கவில்லை.

கடந்த அக்டோபர் 29ல் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு சில நாடுகளில் லூமியா 920 போனை இந்த நவம்பரில் களமிறக்க இருப்பதாக நோக்கியா அறிவித்திருந்தது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இருந்தது.

அதாவது ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தியா, இத்தாலி, போலந்து, ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, துருக்கி, அரேபிய ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆகிய நாடுகளில் களமிறக்க இருப்பதாக நோக்கியா அறிவித்திருந்தது.

ஆனால் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரைத் தவறுதலாகச் சேர்த்துவிட்டதாக நோக்கியாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் விரைவில் இந்த லூமியா 920 ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 4.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பியூர்மோஷன் எச்டி+ கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரை மிகவும் துல்லியமாக இருக்கும். அதோடு இந்த போன் 32ஜிபி சேமிப்புடன் வருகிறது. ஆனால் இந்த சேமிப்பு வசதியை விரிவு செய்ய முடியாது.

மேலும் இந்த போனில் 8.7எம்பி பின்பக்க கேமரா உண்டு. இந்த கேமராவில் எல்இடி ப்ளாஷ் வசதியும் உள்ளது. இதில் இருக்கும் 1.3எம்பி முகப்புக் கேமரா மூலம் சூப்பராக வீடியோ உரையாடல் நடத்தலாம். அதோடு இந்த போனில் 1.5 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் உள்ளதால் இந்த போன் சூப்பரான வேகத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X