நவம்பரில் இந்தியாவில் களமிறங்கும் நோக்கியா லூமியா 920

நோக்கியா நிறுவனம் தனது புதிய விண்டோஸ் 8 போனான லூமியா 920ஐ வரும் நவம்பரில் இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இதை இன்று அதிகாலை நோக்கிய உறுதிய செய்திருக்கிறது. விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் இந்த லூமியா 920 போனை இந்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் களமிறக்குகிறது.
அதனைத் தொடர்ந்து வரும் நவம்பரில் இந்தியா உட்பட ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் இந்த புதிய போனைக் களமிறக்க இருக்கிறது. ஆனால் இந்த போனின் விலை மற்றும் களமிறங்கும் தேதி ஆகியவற்றை நோக்கியா இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த லூமியா 920, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேசன் வசதியுடன் கூடிய 8.7 இன்ச் பின்பக்க கேமராவுடன் வரும் முதல் போனாகும். அதோடு இந்த போனில் சூப்பரான எச்டி டபுள்யுஎக்ஸ்ஜிஎ டிஸ்ப்ளேயும் உள்ளது. அதனால் சூரிய வெளிச்சத்திலும் இதன் டிஸ்ப்ளே மிகத் தெளிவாகத் தெரியும். மேலும் இந்த போனை வயர்லஸ் மூலமாக சார்ஜ் செய்ய முடியும்.
இந்த போன் 1.5 ஜிஹெர்ட்ஸ் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 டூவல் கோர் ப்ராசஸர், 1ஜிபி ரேம், 32ஜிபி சேமிப்பு, 7ஜிபி ஸ்கைட்ரைவ் க்ளவுடு ஸ்பேஸ் மற்றும் 1.2எம்பி 720பி முகப்புக் கேமரா போன்ற வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த போன் இந்திய ரசிகர்களைக் கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications