Home
Mobile

அச்சு அசல் Nokia போன் போலவே.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. வருகிறது HMD போன்.. எந்த மாடல்?

நோக்கியா லூமியா (Nokia Lumia) வடிவமைப்பைக் கொண்ட எச்எம்டி ஸ்கைலைன் போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த புதிய எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்

எச்எம்டி ஸ்கைலைன் அம்சங்கள் (HMD Skyline Specifications): ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (FHD+ OLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அச்சு அசல் Nokia போன் போலவே.. வருகிறது HMD போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Qualcomm Snapdragon 7s Gen 2 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

108எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த எச்டிஎம் போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த எச்எம்டி ஸ்கைலைன் போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த போனின் மென்பொருள்
மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

எச்எம்டி ஸ்கைலைன் போனில் IP67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) வருகிறது. மேலும் இந்த போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

அச்சு அசல் Nokia போன் போலவே.. வருகிறது HMD போன்.. எந்த மாடல்?

4900எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது எச்எம்டி ஸ்கைலைன் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy:@sudhanshu1414, Sudhanshu, Ambhorenokiamob

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Lumia 920 Inspired HMD Skyline Image Leaked Online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X