இன்று அறிமுகமாகும் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள்!

By Super
|

இன்று அறிமுகமாகும் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள்!
லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது நோக்கியா நிறுவனம். லுமியா-900 மற்றும் லுமியா-610 என்ற இந்த ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ் டேங்கோ-7.5 இயங்குதளத்தினை கொண்டது. பொதுவாக எல்லா ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டு அறிமுகமாகி வருகையில், லுமியா வரிசை ஸ்மார்ட்போனான இந்த லுமியா-610 மற்றும் லுமியா-900 ஸ்மார்ட்போன் விண்டோஸ்-7.5 டேங்கோ

ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை வழங்கும்.

லுமியா-900 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியினையும், 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும். இந்த அகன்ற திரையை கொண்ட லுமியா-900 ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் திரை பாதுகாப்பு கவசத்தினை மட்டும் அல்லாமல் இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் கியூவல்காம் ஏபிகியூ-8055 பிராசஸரையும் வழங்கும்.

லுமியா-610 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். லுமியா-900 ஸ்மார்ட்போனை காட்டிலும் இந்த லுமியா-610 ஸ்மார்ட்போன் சற்று குறைந்த திரை வசதியினை கொண்டதாக உள்ளது.

லுமியா-900 8 மெகா பிக்ஸல் மற்றும் முகப்பு கேமரா என்று இரண்டு கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன். லுமியா610 ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருப்பினும் சிறந்த புகைப்படத்தினையும், துல்லியம் கொண்ட வீடியோவினையும் வழங்கும். ஆனால் இதில் முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

லுமியா-900 ஸ்மார்ட்போன் ஸ்டான்டர்டு லித்தியம் அயான் 1,830 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்கும்.

லுமியா-610 ஸ்மார்ட்போன் லித்தியம் அயான் 1,300 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் தொழில் நுட்பங்களுக்கு சிறப்பான வகையில் நீடித்து உழைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X