நோக்கியா லுமியா-900 மற்றும் லுமியா-800 ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீட்டு அலசல்

By Super
|

நோக்கியா லுமியா-900 மற்றும் லுமியா-800 ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீட்டு அலசல்
லுமியா சிரீஸ் ஸ்மார்ட்போன்களின் சிறந்த தொழில் நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது நோக்கியா நிறுவனம். இதே லுமியா வரிசையில் அடு்த்து அடுத்து புதுமையான தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.

இங்கே நோக்கியா லுமியா-800 மற்றும் லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கும் ஓர் சிறிய ஒப்பீட்டை பார்க்கலாம். லுமியா-800 ஸ்மார்ட்போனையும் விட சிறந்த ஒலி திறனையும், சிறந்த கேமரா துல்லியத்தினையும் லுமியா-900 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

லுமியா-800 ஸ்மார்ட்போனிலும் சிறந்த தொழில் நுட்பங்கள் உள்ளது. நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரையை வழங்கும். இதே நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரையை கொடுக்கும். இந்த பெரிய திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை பெற முடியும்.

ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் மூலமும் உயர்ந்த தொழில் நுட்பங்களை எளிதாக பெறலாம். லுமியா-900 மற்றும் லுமியா-800 ஸ்மார்ட்போனில் சிறப்பான 3ஜி தொழில் நுட்பத்தினை பயன்படுத்தலாம். நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போனில் இன்னும் என்ன ஒரு வித்தியாசம் என்றால் லுமியா-900 ஸ்மார்ட்போனில் கூடுதலாக 4ஜி எல்டிஇ தொழில் நுட்பத்தினையும் உபயோகிக்கும் வசதி உண்டு.

என்எஃப்சி தொழில் நுட்ப வசதிக்கும் லுமியா-900 ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும். நோக்கியாவின் லுமியா-900 ஸ்மார்ட்போனின் மூலம் நிச்சயம் அதிக அப்ளிக்கேஷன்களையும் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X