நோக்கியா லூமியா 830 - வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்

Written By:

நோக்கியா நிறுவனம் லூமியா 830 போன் மாடலை செப்டம்பர் 4 ஆம் தேதி பெர்லினில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளியாக இருக்கும் லூமியா 830 மாடலின் புகைப்படங்கள் கசிந்திருக்கின்றன, போனின் வடிவமைப்பு லூமியா 925 மாடலை போன்றே காட்சியளிக்கின்றது.

வியக்கவைக்கும் நோக்கியா லூமியா 830 சிறப்பம்சங்கள்

சதுர வடிவில் மெட்டல் ரிம் மற்றும் பாலிகார்பனேட் மூலம் பின்புறம் உருவாக்கப்பட்டுள்ளதோடு கேமரா வெளிய தெரியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியான புகைப்படங்கள் அந்தளவு தெளிவாக இல்லாத நிலையில் போனை பார்க்க செப்டம்பர் வரை காத்திருக்க தான் வேண்டும். நோக்கியா லூமியா 830 மாடலிலும் வயர்லெஸ் சார்ஜிங் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்ப்படுகின்றது.

வெளியான தகவல்களை பொருத்த வரை லூமியா 830 மாடலில் 4.5 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர், 1 ஜி.பி ராம், 8 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் மைக்ரோ மெமரி ஸ்லாட்டும் 20 எம்.பி பியூர்வுயூ கேமரா கூடுதலாக 5 எம்.பி முன் பக்க கேமராவும் இதில் அடக்கம். இதோடு நோக்கியா லூமியா 730 மாடலும் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே இந்தாண்டு நோக்கியா நிறுவனம் லூமியா 930 மாடல்களை வெளியிட்டதோடு, நோக்கியாவின் புது வரவுகள் ஐ.எப்.ஏ நிகழ்ச்சிகளுக்கு ஒரு நாள் இடைவெளியில் வெளியிடப்படுகிறது. ஐ.எப்.ஏ தொழில் மாநாடு செப்டம்பர் மாதம் 5 முதல் 10 தேதி வரை பெர்லினில் நடைபெறுகிறதும் குறிப்பிடத்தக்கது.

Read more about:
English summary
Leaked photos and specifications of Nokia Lumia 830
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot