Home
Mobile

லுமியா-800 மற்றும் ஆம்னியா எம் ஸ்மார்ட்போன்கள்: ஓர் சிறிய ஒப்பீடு

By Super

லுமியா-800 மற்றும் ஆம்னியா எம் ஸ்மார்ட்போன்கள்: ஓர் சிறிய ஒப்பீடு
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நோக்கியா லுமியா-800 மற்றும் சாம்சங் ஆம்னியா எம் என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன் பற்றிய ஒப்பீட்டை இங்கே பார்க்கலாம்.

இங்கு கூறப்பட்டுள்ள இந்த இரண்டும் ஸ்மார்ட்போன்களுமே விண்டோஸ்-7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும். இதனால் இந்த 2 ஸ்மார்ட்போன்களிலுமே சிறந்த இயங்குதளத்தின் வசதியினை பயன்படுத்த முடியும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றாக இருப்பினும், இதன் மற்ற தொழில் நுட்ப விவரங்கள் அனைத்தும் வேறாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.

நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டதாக இருக்கும். ஆனால் லுமியா-800 ஸ்மார்ட்போனின் திரையினையும் விட, சாம்சங் ஆம்னியா எம் ஸ்மார்ட்போனின் திரை சற்று பெரிதாக இருக்கிறது. ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் அகன்ற தொடுதிரை வசதியினை கொண்டதாக இருக்கும்.

இந்த இரண்டு ஸமார்ட்போனில் திரையின் அளவும் வேறு வேறு என்றாலும் இதில் உள்ள திரை துல்லியம் ஒன்றாக தான் தெரிகிறது. இந்த 2 ஸ்மார்ட்போன்களின் திரையும் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்குகிறது.

சாம்சங் ஆம்னியா எம் ஸ்மார்ட்போனின் திரை, நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போனையும் விட அகன்றதாக இருப்பினும், துல்லியத்தை பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒன்று தான் என்று கூறலாம். ஒரு ஸ்மார்ட்போனுக்கு திரை அளவை விடவும், துல்லியம் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது கேமராவினை பொருத்த வரையில் சாம்சங் ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் டியூவல் கேமராவினை கொண்டதாக இருக்கும். ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ கேமராவினையும் கொண்டது. ஆம்னியா எம் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா 2592 X 1944 பிக்ஸல் கேமார துல்லியத்தினை கொடுக்கும்.

நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜிஏ முகப்பு கேமரா இல்லை. இருப்பினும் நோக்கியாவின் 8 மெகா பிக்சஸ் கேமரா 3264 X 2448 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை தருகிறது. லுமியா-800 ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவின் துல்லியம், ஆம்னியா எம் ஸ்மார்ட்போனின் துல்லியத்தினை விடவும் அதிகமாக உள்ளது.

லுமியா-800 ஸ்மார்ட்போனின் விண்டோஸ்-7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க இதில் 1.4 ஜிகாஹர்ட்ஸ் ஸ்கார்பியன் பிகாசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்னியா எம் ஸ்மார்ட்போனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போன் 1,450 எம்ஏஎச் பேட்டரி வசதியினை வழங்கும். சாம்சங் ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் 1,500 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொடுக்கும்.

லுமியா-800 ஸ்மார்ட்போனில் 2ஜி வசதிக்கு 265 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 3ஜி வசதிக்கு 335 ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். ஆம்னியா எம் ஸ்மார்ட்போனில் 2ஜி வசதிக்கு 530 மணி நேரம் ஸாடன்-பை வசதியினையும், 420 மணி நேரம் 3ஜி வசதிக்கு ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும்.

ஆம்னியா எம் ஸ்மார்ட்போனில் 2ஜி வசதிக்கு 12 மணி நேரம் 40 நிமிடம் டாக் டைம் மற்றும் 3ஜி வசதிக்கு 7 மணி நேரம் 50 நிமிடம் டாக் டைம் வசதியினை பெறலாம். நேக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போன் 13 மணி நேரம் 2ஜி வசதிக்கு டாக் டைமினையும், 9 மணி நேரம் 30 நிமிடம் 3ஜி வசதிக்கு டாக் டைம் வசதியினையும் வழங்கும்.

நோக்கியா லுமியா-80 ஸ்மார்ட்போன் ரூ. 24,999 விலையில் பெறலாம். சாம்சங் ஆம்னியா எம் ஸ்மார்ட்போனை ரூ. 16,500 விலையில் பெறலாம். நோக்கியா லுமியா எம் ஸ்மார்ட்போன் அதிக விலை கொண்டாதாக இருப்பினும் அதற்கு ஏற்ற தொழில் நுட்பத்தினையும் வழங்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X