Home
Mobile

நோக்கியா லுமியா-800, லுமியா-710... பெயரில் மட்டும் வித்தியாசம்!

By Super

நோக்கியா லுமியா-800, லுமியா-710... பெயரில் மட்டும் வித்தியாசம்!
மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதே போல் நோக்கியா லுமியா குடும்பத்தில் இருந்து இரண்டு ஸ்மார்ட்போன்கள் இங்கு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 லுமியா ஸ்மார்ட்போன்களுமே போட்டிகளத்தில் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களை முந்திவிடும் போல் தெரிகிறது. இந்த இரண்டு நோக்கியா லுமியா ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போன் 3.7 அமோல்டு மல்டி டச் ஸ்கிரீன் கொண்டதால், 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினையும் வழங்கும். லுமியா-710 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் டிஎப்டி திரையை பெற்றுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போனிலுமே பாதுகாப்பாக கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியான வசதிகளை கொண்டதாக இருக்கிறது.

லுமியா-800, லுமியா-710 ஸ்மார்ட்போன்களில் இருக்கும் விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தினை வழங்கும் ஸ்கார்பியன் பிராசஸர் உள்ளது. இந்த பிராசஸர் இயங்குதளம் எந்த விதமான தங்குதடையும் இல்லாமல் செயல்பட பெரிதும் துணை புரிகிறது. அட்ரினோ 205 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பமும் இதில் இருக்கிறது.

ஆனால் கேமரா வசதியில் லுமியா-800 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கிறது. லுமியா-710 ஸ்மார்ட்போனோ 5 மெகா பிக்ஸல் கேமராவினை பெற்றுள்ளது.

லுமியா-800 ஸ்மார்ட்போனையும் விட குறைந்த கேமரா வசதி கொண்டது லுமியா-710 ஸ்மார்ட்போன் என்றாலும், லுமியா-710 ஸ்மார்ட்போனின் மூலம் சிறந்த புகைப்படத்தையும், வீடியோ வசதியினையும் பெற முடியும். வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்போன்களும் 720பி உயர்ந்த துல்லியத்தினை வழங்கும்.

டபிள்யூஏபி 2.0 பிரவுசர் மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில் நுட்பங்களின் மூலம் சவுகரியத்தினை வழங்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வாடிக்கையாளர்களின் தேவையை கருதி சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்று தாராளமாக கூறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X