ரூ.8,299க்கு நோக்கியா 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

By Meganathan
|

இந்தியாவில் 4ஜி சேவை ஆரம்பித்து அனைவரும் வாங்க கூடிய விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றது. 4ஜி வசதி கொண்ட நோக்கியா லூமியா 638 இந்தியாவில் ரூ. 8,299க்கு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனாவில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு அறிமுகமாகி இருப்பதோடு விரைவில் பல ஆன்டிராய்டு போன்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

ரூ.8,299க்கு நோக்கியா 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

இன்று முதல் அமேசான் தளத்தின் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் மட்டும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

[கணினியில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி]

புதிய நோக்கியா லூமியா 638, 4.5 இன்ச் க்ளியர்பேக் எல்சிடி டிஸ்பளே 854*480 டிஸ்ப்ளே கொண்டுள்ளதோடு கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. இந்த கிளாஸ் கடுமையான இடங்களில் விழுந்தாலும் அவ்வளவு சீக்கிரம் உடையாது.

ரூ.8,299க்கு நோக்கியா 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

1.2 ஜடிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளது. 5 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் முன்பக்க கேமரா வசதி கொடுக்கப்படாதது வியப்பை அளிக்கின்றது.

[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்]

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. விண்டோஸ் 8.1 ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஈ வசதி இருப்பதோடு 1830 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Nokia Lumia 638 4G LTE Phone with Windows Phone OS Launched in India at Rs. 8,299

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X