கைதட்டல்களுடன் களம் இறங்கும் லுமியா ஸ்மார்ட்போன்கள்!

Posted By: Staff
கைதட்டல்களுடன் களம் இறங்கும் லுமியா ஸ்மார்ட்போன்கள்!
பல புதிய தொழில் நுட்பங்களை கொடுப்பதால் நோக்கியாவின் லுமியா சிரீஸ் மொபைல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதே லுமியா வரிசையில் வரும் நோக்கியா லுமியா-610 மற்றும் லுமியா-710 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களையும் பார்க்கலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 3.7 இஞ்ச் திரை டிஎப்டி தொழில் நுட்பம் கொண்டது. 16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். இதில் கொரில்லா கிளாஸும் பொருத்தப்பட்டுள்ளதால் மொபைல்களின் திரையில் எந்த விதமான கீறல்களும் விழாது பாதுகாக்கும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் நிறைய வசதிகள் ஒன்றாக ஒத்து இருப்பதையும் பார்க்க முடியும். இந்த 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அதிகபட்சமாக 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தினை பெற முடியும். ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்களின் மூலம் இந்த லுமியா-610 மற்றும் லுமியா-710 ஸ்மார்ட்போன்களில் சிறப்பான பிரவுசிங் வசதியையும் கொடுக்கும்.

வைபை, புளூடூத், யூஎஸ்பி போன்ற மொபைல்களை இதில் எளிதாக பெற்று பயனடையலாம். அந்த அளவு உயர்ந்த தொழில் நுட்பமும் இதில் பயன்படுத்தபட்டுள்ளது என்பதை, இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துகையில் நிச்சயம் உணர முடியும். 8ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி உள்ளது.

நோக்கியா-610 மற்றும் நோக்கியா-710 நவீன வசதிகளை கொடுப்பதற்காக மைக்ரோசாஃப்டு 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் இயங்கும். நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போனில் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸரும், கியூவல்காம் எம்எஸ்எம்-8255 ஸ்னாப்டிராகன் சிப்செட்டும் இதில் உள்ளது. 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எளிதாக சப்போர்ட் செய்யும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களை பொருத்த வரையில் இதன் பேட்டரி நீடித்து உழைக்குமா என்ற கவலை தேவையே இல்லை. 1,300 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ளது.

நோக்கியா லுமியா-710 ஸ்மார்ட்போன் ரூ.20,000 ஒட்டிய விலையிலும், நோக்கியா லுமியா-610 ரூ.11,000 ஒட்டிய விலையிலும் எளிதாக பெற முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot