நோக்கியாவின் புதிய லூமியா 530 மொபைல் ஒரு பார்வை....!
முன்னோரு காலத்தில் மொபைல் உலகில் கொடி கட்டி பறந்த நோக்கியா இன்று மொபைல் உலகில் தானும் ஒரு பிராண்டாக இருக்கவே போராடி வருகின்றது எனலாம்.
அந்தளவுக்கு இன்றைக்கு மிகவும் அதிகமாக போட்டிகள் வந்துவிட்டன பல புது மாடல் மொபைல்களை நோக்கியா வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றது எனலாம்.
அந்தவகையில் நோக்கியா தற்போது புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் பெயர் நோக்கியா லூமியா 530 என்பதாகும் இதோ அந்த மொபைல் பற்றி ஒரு லுக்.

4 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் குவாட் கோர் பிராஸஸர் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் 4GB இன்பில்ட் மெமரி 512MB க்கு ரேம் ஆகியவற்றையும் இந்த மொபைல் கொண்டுள்ளது.
5MP க்கு கேமரா கொண்டுள்ள இந்த மொபைலின் பெரிய மைனஸ் பிரன்ட் கேமரா இல்லாதது தான் ஆகும்.
இந்த மொபைலின் பேட்டரி திறன் 1430mAh ஆகும் இது விண்டோஸ் 8.1 ஓ.எஸ்ஸில் இயங்கும் மொபைல்.


Click it and Unblock the Notifications