டெல்லியில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Posted By:

டெல்லியில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்!
டில்லியில் நோக்கியாவின் புதிய லுமியா-510 ஸ்மார்ட்போன் அதிகார பூர்வமாக அறிமும் செய்யப்பட்டுள்ளது. நிறைய லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நோக்கியா, இப்போது லுமியா-510 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்கிறது.

நிறைய ஸ்மார்ட்போன்கள் வெளிநாடுகளில் உடனுக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுவிடுகின்றன. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்கள் எப்போது நமது நாட்டில் களமிறக்கப்படும் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி புதிய ஸ்மார்ட்போனின் வருகைக்காக ஏங்கும் வாடிக்கையாளர்களுக்கு நோக்கிய லுமியா-510 ஸ்மார்ட்போனின் அறிமுகம் இனிமையான ஒன்றாக இருக்கும்.

4 இஞ்ச் யபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பம் கொண்ட இந்த புதிய லுமியா-510 ஸ்மார்ட்போன் நமது இந்திய எலக்ட்ரானிக் சந்தைகளில் பெரியளவில் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 5 மெகா பிக்ஸல் கேமராவும், 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் தகவல்களை வெகு சீக்கிரத்தில் பெற்றுவிட இந்த ஸ்மார்ட்போன் உதவும்.

800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிங்கிள் கோர் பிராசஸர் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக இயங்க உதவும். இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கக் கூடிய முக்கிய வசதியும் உள்ளது. இதில் 7 ஜிபி வரை ஸ்கைட்ரைவ் க்ளவுட் ஸ்டோரேஜ் வசதியினை எளிதாக பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் முக்கியத் தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் 1,300 எம்ஏஎச் பேட்டரி ஒத்துழைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் விண்டோஸ்-7.8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் பெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 11,000 விலை கொண்டதாக இருக்கும். அடுத்த வாரம் இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரானிக் சந்தையினை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்