Home
Mobile

ஆவலைத்தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்!

By Super

ஆவலைத்தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்!
ஏராளமான ஸ்மார்டபோன்கள் சந்தையில் அணிவகுத்து வந்தாலும், சில ஸ்மார்ட்போன்கள் மட்டுமே வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், நோக்கியா லுமியா 4ஜி எல்டிஇ ஸ்மார்ட்போன் மீது எதிர்பார்ப்பு வெகுவாகவே கூடியுள்ளது.

இந்த புதிய நோக்கியாஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 3.7 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை கொண்டதாக இருக்கும். இந்த டிஸ்ப்ளே 480 X 800 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். மேலும், இது மிக உயர்ந்த அமோல்டு திரை தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது.

விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த நோக்கியா லுமியா 4ஜி எல்டிஇ ஸ்மார்ட்போன், 1400 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் எம்எஸ்எம்8255 பிராசஸரையும் கொண்டிருக்கும்.

1450 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் இதில் 10 மணி நேரம் வரை டாக் டைம் வசதியினையும், 335 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம். 16ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் இதில் பெற முடியும். இதில் 512எம்பி ரேம் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதன் 8.8 மெகா பிக்ஸல் கேமரா 3264 X 2448 பிக்ஸல் ரிசல்யூஷனையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும். 1280 x 720 கேமரா வீடியோ ரிசல்யூஷனை நொடிக்கு 30 ஃபிரேம்களில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பமும் இதில் உள்ளது. இந்த நோக்கியா லுமியா 4ஜி எல்டிஇ ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வசதிகளையும் பெற முடியும். இந்த புதிய நோக்கியா லுமியா 4ஜி எல்டிஇ ஸ்மார்ட்போனின் விலை குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X