குறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.!
நோக்கியா நிறுவனம் தற்போது 2.1, நோக்கிய 3.1, நோக்கிய 5.1 என்று மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை விபரம் தற்போது, நோக்கியா 2,1 மாடல் ரூ.7,000, 3.1 மாடல் ரூ.12000, 5.1 மாடல் ரூ.14,999 என நிர
இந்திய சந்தையில் மீண்டும் கால்பதிக்கும் முனைப்பில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. நோக்கிய நிறுவனம் தற்போது பல்வேறு புதிய மாடல் போன்களை அறிவித்து வருகின்றது.

குறைந்த விலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய வடிவத்துடன் தற்போது களமிறங்க உள்ளது. மற்ற நிறுவனம் வழங்கும் தொழில் நுட்ப வசதிகளை குறையாமல் தற்போது நோக்கிய நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது மூன்று போன்களை அறிமுகம் செய்துள்ளது.

புதிய நோக்கியா:
நோக்கியா நிறுவனம் தற்போது 2.1, நோக்கிய 3.1, நோக்கிய 5.1 என்று மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை விபரம் தற்போது, நோக்கியா 2,1 மாடல் ரூ.7,000, 3.1 மாடல் ரூ.12000, 5.1 மாடல் ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 2.1 சிறப்பு:
5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே ஆக்டோகோர் குவால்காம், பஸ்னாப்டிரான், 425 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு ஓரியோ, டூயல் சிம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5எம்பி செல்பி கேமரா, 4 ஜி வோல்ட் இ, 4000 எம்ஹெச் பேட்டரி ஆகியவை அடங்கியுள்ளன.

நோக்கியா 3.1 சிறப்பு:
5.2 இன்ச் ஹெச்டி டிஎஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்மோகோர் மீடியா டெக், MT6750 பிராசஸர்,
3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
8 எம்பி செல்பி கேமரா, 4ஜி வோல்ட் இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள், 2900 எம்ஹெஎச் பேட்டரி உள்ளிட்ட வசதிகள் அடங்கியுள்ளன.

நோக்கியா 5.1 சிறப்பு:
5.5 இன்ச் ஹெச்டி டிஎஸ்பிளே கார்னிங், கொரில்லா கிளாஸ் அம்சம், ஆக்டோகோர் மீடியா டெக், MT6755 பிராசஸர்
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு கோ ஓரியோ இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 6 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 8 எம்பி செல்பி கேமரா, 4ஜி வோல்ட் இ, வைபை, ப்ளூடூத் வசதிகள், 2970 எம்ஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அடங்கியுள்ளன.

கேஷ்பேக் ஆப்பர்:
நோக்கியாவின் 2.1, 3.1, 5.1 ஆகிய போன் மாடல்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் ஆப்பர் மற்றும் ஐசிஐசி வங்கி டெபிட், கிரெடிட் கார்கள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








