Home
Mobile

Nokia 215 மற்றும் 225 4G போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

பட்ஜெட் விலை போன்களுக்கென்று இந்தியச் சந்தையில் ஒரு தனி மவுசு இருக்கிறது. இதனை உணர்ந்த நோக்கியா நிறுவனம் தற்பொழுது நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 என்ற 2 அடிப்படை பியூச்சர் போன் மாடல்களை மலிவு விலையில் 4G சேவையுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டும் புதிய பியூச்சர் போன்களும் எப்பொழுது விற்பனைக்கு கிடைக்குமென்ற செய்தியை நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 பியூச்சர் போன்

நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 பியூச்சர் போன்

சில நாட்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 பியூச்சர் போன்களை நோக்கியா நிறுவனம் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 215 போன் சியான் கிரீன் மற்றும் பிளாக் கலர் விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 225 போன் கிளாசிக் ப்ளூ, மெட்டாலிக் சாண்ட் மற்றும் பிளாக் கலர் விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனைக்கு கிடைக்கும் தேதிகள்

விற்பனைக்கு கிடைக்கும் தேதிகள்

நோக்கியாவின் இரண்டு புதிய தயாரிப்புகளும் அக்டோபர் 23ம் தேதி முதல் நோக்கியாவின் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், நோக்கியா 225 பியூச்சர் போன் பிளிப்கார்ட் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் நவம்பர் 6ம் தேதி முதல் கிடைக்கும். அதேபோல், நோக்கியா 215 பியூச்சர் போன் நவம்பர் 18ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தவிர அனைத்து சிறப்பம்சங்களும் ஒரே மாதிரி தான்

இது தவிர அனைத்து சிறப்பம்சங்களும் ஒரே மாதிரி தான்

நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 ஆகிய இரண்டு பியூச்சர் போன்களும் கேமராவைத் தவிர அனைத்து சிறப்பம்சங்களும் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளுடன் வருகின்றது. குறிப்பாக நோக்கியா 225 பியூச்சர் போன் 4ஜி சேவையுடன் ஒரு பின்புற விஜிஏ கேமராவுடன் வருகிறது. நோக்கியா 215 பியூச்சர் போன் கேமரா எதுவும் இல்லாமல் 4ஜி சேவை இணக்கத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 சிறப்பம்சம்

நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 சிறப்பம்சம்

  • 2.4' இன்ச் உடன் 320 x 240 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட QQVGA எல்சிடி டிஸ்பிளே
  • 64MB ரேம், 128MB ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ்
  • பாலிகார்பனேட் பாடி
  • வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
  • பேட்டரி
    • மியூசிக் பிளேயர்
    • புளூடூத்
    • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
    • மைக்ரோ யுஎஸ்பி
    • எல்இடி டார்ச்லைட்
    • 1200 எம்ஏஎச் பேட்டரி
    • விலை விபரம்

      விலை விபரம்

      நோக்கியா 215 பியூச்சர் போன் 4ஜி மற்றும் 225 பியூச்சர் போன் 4ஜி ஆகி இரண்டு மாடல்களும் நோக்கியாவின் பிரபலமான கிளாசிக் கேமான "ஸ்னேக்" கேம் உடன் கூடிய பிற கேம்களுடன் வருகிறது. நோக்கியா 215 பியூச்சர் போன் இந்தியச் சந்தையில் வெறும் ரூ. 2,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நோக்கியா 225 போன் மாடல் ரூ .3,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia launches the Nokia 215 and 225 in India, starting at Rs 2,499 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X