பேட்மேன் முத்திரையுடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்!

By Super
|

பேட்மேன் முத்திரையுடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்!
லுமியா-800 டார்க் நைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் லுமியா வரிசையில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் என்று சொல்லலாம்.

பொதுவாக எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதன் திரை மற்றும் அதன் தொழில் நுட்ப வசதிகள் பற்றி பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் இதன் தொழில் நுட்பம் அல்லாது சில புதிய வசதிகளும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் நிறைய கேம்கள் ப்ரீலோடடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுகள் ப்ரீலோடடு செய்யப்பட்டுள்ளது என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் இதில் டார்க் நைட் அப்ளிக்கேஷன் கொடுக்கப்பட்டுள்ளது என்பது புதிய செய்தி.

இந்த டார்க் நைட் அப்ளிக்கேஷனில் வீடியோ மற்றும் நிறைய கேம்கள் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளது. டார்க் நைட் வால்பேப்பர்கள், ட்ரெய்லர்கள், ரிங்டோன் என்று டார்க் நைட் ரைசஸ் புதிய வெர்ஷன் திரைப்படத்தின் ஸ்வாரசியமான விஷயங்கள் இதில் விளையாட்டாகவும், ரிங்டோனாகவும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆர்வத்தினை வழங்கும் விஷயமாகும்.

நோக்கியா லுமியா-800 டார்க் நைட் ஸ்மார்ட்போன் ரூ. 24,999 விலை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் நோக்கியா ஸ்டோர்களில் கிடைக்கும். சின்ன குழந்தைகளை வெகுவாக கவர்ந்த பேட்மேன் முத்திரையும் இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் பதிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு கூடுதல் தகவல்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X