புதிய ஆஷா-202 மொபைல் அறிமுகம் செய்யும் நோக்கியா!

By Super
|

புதிய ஆஷா-202 மொபைல் அறிமுகம் செய்யும் நோக்கியா!
வாடிக்கையாளர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்த ஆஷா-202 மொபைலை நோக்கியா இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு சிம் கார்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் 2.4 இஞ்ச் திரை வசதி கொண்டது. பட்ஜெட் விலை கொண்ட இந்த இரண்டு மொபைல்களும் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைலுக்கு தேவையான அடிப்படை வசதி மட்டும் அல்லாமல், அதற்கும் மேல் அதிக தொழில் நுட்பத்திற்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்யும்.

குறைந்த விலை கொண்ட மொபைல் என்றாலும் சிறந்த கேமரா வசதியினையும் இந்த மொபைலின் மூலம் பெற முடியும். இளைஞர்களை கவரும் வகையில் இந்த மொபைலில் சில தொழில் நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் இஏ-கேமஸ் பேக் மற்றும் நிம்பூஸ் சேட் போன்ற புதிய வசதிகளையும் பெற முடியும். பிளாக் மற்றும் கோல்டு, சில்வர் வைட், டார்க் கிரே, டார்க் ரெட் என்று விதவிதமான நிறத்தில் இந்த ஆஷா-202 மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்றங்களை கொடுக்கும் புளூடூத் வசதி மட்டும் அல்லாமல் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதி விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். எந்த மொபைல் என்று எடுத்து கொண்டாலும் அதில் பிரவுசிங் வசதி மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆஷா-202 மொபைல் சிறப்பாக பிரவுசிங் வசதிக்கு சப்போர்ட் செய்யும்.

எஃப்எம், மியூசிக் பிளேயர் போன்ற பொழுதுபோக்கு அம்சத்திற்கும் சப்போர்ட் செய்யும் இந்த நோக்கியா நிறுவனத்தின் ஆஷா-202 மொபைலை ரூ.4,149 விலையில் பெற முடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X