புதிய மொபைல்களை வழங்கும் நோக்கியா!

By Super
|

புதிய மொபைல்களை வழங்கும் நோக்கியா!
இரண்டு புதிய மொபைல்களை வெளியிட்டுள்ளது நோக்கியா நிறுவனம். ஆஷா வரிசை மொபைல்களை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தும் வகையில் ஆஷா-305 மற்றும் ஆஷா-311 என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது நோக்கியா.

இந்த மொபைல்களின் தொழில் நுட்ப வசதிகளும் வெளியாகி உள்ளது. ஆஷா-305 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டதாக இருக்கும். பொதுவாக மொபைல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், டியூவல் வசதி கொண்ட மொபைலை எதிர்பார்க்கின்றனர்.

நோக்கியா ஆஷா-305 மொபைல் டியூவல் வசதி கொண்ட மொபைலாக இருப்பதில் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும். இந்த மொபைல் 3 இஞ்ச் திரை வசதியோடு, டபிள்யூகியூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினையும் வழங்கும்.

ஆஷா-305 மொபைல் 2 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த மொபைல் டர்க் கிரே மற்றும் ரெட் ஆகிய வண்ணங்களை கொண்டுள்ளது. இந்த மொபைல் இன்னும் மிட்-ப்ளூ மற்றும் சில்வர் வைட் ஆகிய நிறங்களிலும் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றது.

ஆஷா-311 மொபைலும் சிறந்த தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும். 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த மொபைலும் 3 இஞ்ச் திரையினை கொண்டதாக உள்ளது. டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை இந்த மொபைலில் எளிதாக பெறலாம்.

15 லெவல் புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் வெர்ஷன் இதில் ப்ரீ-லோடடு செய்யப்பட்டுள்ளது. ரோஸ் ரெட், டார்க் க்ரே மற்றும் சேன்டு வைட் என்று பல நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஆஷா-311 மொபைல் ரூ. 7, 139 விலை கொண்டதாக இருக்கும்.

ஆஷா-305 மொபைல் ரூ. 5, 029 விலை கொண்டதாக இருக்கும். இந்த மாதம் 12ம் தேதி எல்லா மொபைல் ஸ்டோர்களிலும் இந்த மொபைல் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X