இந்திய சந்தையை முகாமிட்டு இருக்கும் ஆஷா-303 மொபைல்!

Posted By: Staff
இந்திய சந்தையை முகாமிட்டு இருக்கும் ஆஷா-303 மொபைல்!
சிறந்த தொழில் நுட்பத்தை வழங்கும் ஆஷா சிரீஸ் மொபைலை வெளியி்ட்டு வெற்றி வாகை சூடி உள்ளது நோக்கியா நிறுவனம். ஆஷா-303 மொபைலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது நோக்கியா. இந்த மொபைலை இனி இந்திய மொபைல் மார்கெட்டிலேயே எளிதாக பெற முடியும்.

வேகமாக இயங்கும் பிராசஸர் கொண்ட இந்த ஆஷா-303 மொபைலில் பல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த அப்ளிக்கேஷன்களும் ஃப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் லைட், ஸென்கா டிவி, வாட்ஸ்ஆப்ஸ் மற்றும் ஃப்ரீ நோக்கியா மியூசிக் சேவையும் இதில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆஷா-303 மொபைலில் 32ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். 3.2 மெகா பிக்ஸல் கொண்ட இதன் கேமரா டிஜிட்டல் சூம் வசதியினையும் வழங்கும். அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் ஜிபிஆர்எஸ், எட்ஜ், புளூடூத், வைபை, யூஎஸ்பி போன்ற அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த சவுகரியங்களும் இந்த மொபைலில் உண்டு.

பார்ப்பவர்களின் கண்களில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும் ரெட் மற்றும் கிராஃபைட் நிறத்தில் ஆஷா-303 மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் மதிப்பு ரூ.8,900. இந்த விலையில் எளிதாக ஆஷா-303 மொபைலை பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்