பழைய கெத்துடன் 5ஜி போனை அறிமுகம் செய்த Nokia! விலையை மீறிய தரமான அம்சம்.. யோசிக்கவே வேணாம்!

|

5ஜி ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு சரியான தீர்வை வழங்கி இருக்கிறது நோக்கியா நிறுவனம். இந்தியாவில் நோக்கியா நிறுவனம் புதிய ஆண்ட்ராய்ட் 5ஜி ஸ்மார்ட்போனை பல வருட வாரண்டி மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Nokia G60 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Nokia G60 ஸ்மார்ட்போன் அறிமுகம்

நோக்கியா நிறுவனம் இந்த மாத இறுதியில் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கி இருக்கிறது. நோக்கியா இந்தியாவில் Nokia G60 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 5ஜி அறிமுகமாகி வளர்ந்து வரும் நேரத்தில் நோக்கியா நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனாக ஜி60 ஸ்மார்ட்போனை சரியான நேரத்தில் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தியாவில் பக்கா 5ஜி ஸ்மார்ட்போன்

இந்தியாவில் பக்கா 5ஜி ஸ்மார்ட்போன்

கீபோர்ட் போன்களில் கொடிகட்டி பறந்த நிறுவனமான நோக்கியா தற்போது பட்ஜெட் விலை மற்றும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. நிறுவனம் வளர்ந்து வரும் 5ஜி சேவையை கருத்தில் கொண்டு தற்போது நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் களமிறக்கியது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவிற்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கிறது.

நோக்கியா ஜி60 இந்தியா விலை

நோக்கியா ஜி60 இந்தியா விலை

நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ஆனது ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஷிப்பிங் நவம்பர் 8 முதல் தொடங்குகிறது. நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

நோக்கியா ஜி60 சிறப்பம்சங்கள்

நோக்கியா ஜி60 சிறப்பம்சங்கள்

நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே உடன் முழு HD+ தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த விலைப் பிரிவில் நாட்ச் டிஸ்ப்ளே ஆதரவுடன் நோக்கியா ஜி60 வெளியாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. சிறந்த வடிவமைப்பு, மூன்று வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்பு மற்றும் மூன்று வருட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வெளியாகி இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் 15 வரை அப்டேட் கிடைக்குமா?

ஆண்ட்ராய்ட் 15 வரை அப்டேட் கிடைக்குமா?

நோக்கியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி மூன்று வருட ஓஎஸ் பாதுகாப்பை வழங்கும்பட்சத்தில் ஆண்ட்ராய்ட் 15 வரையிலான ஓஎஸ் அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகி இருக்கிறது. நோக்கியா ஜி60 ஆனது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

50 மெகாபிக்சல் பிரதான கேமரா

50 மெகாபிக்சல் பிரதான கேமரா

நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 எம்பி அல்ட்ராவைட் சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது. இதில் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் 2 வருட வாரண்டி கிடைக்கிறது. வரவேற்கத்தக்க கூடுதல் சலுகை இதுவாகும்.

5ஜி ஸ்மார்ட்போன்

5ஜி ஸ்மார்ட்போன்

நோக்கியா ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது இருப்பினும் எந்த பேண்ட் இதில் இருக்கும் என்ற தகவல் இல்லை இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கான IP52 மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக பாதுகாப்பு அம்சத்துக்கு என கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nokia Launched its Best 5G Smartphone at Mid-Range Price: Right time to Switch on 5G!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X