நோக்கியாவிலும் ஆண்ட்ராய்டு வந்தாச்சுங்க...!

Posted By:

இறுதியில் வந்தாச்சுங்க நோக்கியாவிலும் ஆண்ட்ராய்டு. ஆமாங்க, இன்று ஸ்பெயினில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் நோக்கியா தனது மூன்று ஆண்ட்ராய்டு மொபைல்களை அறிமுகப்படுத்தியது.

அதன் பெயர்கள் நோக்கிய X, X+, மற்றும்XL என்பது ஆகும் மைக்ரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய பிறகு அதை முன்னோக்கி கொண்டு வர எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது எனலாம்.

அதில் ஒன்றுதான் இது, காலத்திற்கேற்ப்ப நாமும் மாற வேண்டும் என்பதை மைக்ரோசாப்ட் நன்கு அறிந்து வைத்திருக்கிறது அதனால் தான் இன்று உலகின் பணக்கார கம்பெனியாக வலம் வந்து கொண்டிருக்கிறது எனலாம்.

நோக்கியாவிலும் ஆண்ட்ராய்டு வந்தாச்சுங்க...!

இந்த சூட்சமத்தை தெரியததால் தான் அன்று நோக்கியா தனது நிறுவனத்தை மைக்ரோசாப்டிடம் விற்றது.

இன்று வெளியான இந்த மொபைல்கள் நிச்சயம் சந்தைகளில் பெரிய வெற்றி பெறும் என்று நாம் கூறலாம்.

இதன் விலைகள் முறையே ரூ.7,594 முதல் ரூ.9,301 வரை இருக்கும் என நோக்கியா கூறியுள்ளது...இதே போல் இந்த விழாவில் வெளியிட்ட சாம்சங் S5 முதலிய மொத்த மாடல் மொபைல்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot