தவம் கிடந்தோம்! இப்படி ஒரு NOKIA போனுக்கு! 6-இன்ச் டிஸ்பிளே, 8GB ரேம், 48MP கேம், 4400mAh பேட்டரி! என்ன மாடல்?
பொதுவாகவே, நோக்கியா மொபைல்கள் எல்லாமே கொஞ்சம் 'ரக்டு' மாடல்களாக தான் இருக்கும். இதில் நோக்கியாவே ரக்டு போன்களை அறிமுகம் செய்தால்.. அது எப்படி இருக்கும்? இப்படி ஒரு நோக்கியா போனுக்கு தானே காத்து கிடந்தோம் என்று கூறவைக்கும் படியாக இருக்கும் அல்லவா!
நோக்கியா நிறுவனம், ஜெர்மன் நிறுவனமான ஐ.சேஃப் மொபைல் ஜிஎம்பிஎச் (i.safe MOBILE GmbH) உடன் இணைந்து 2 புதிய ரக்டு மொபைல் போன்களை (Rugged Mobile Phones) அறிமுகம் செய்துள்ளது: நோக்கியா எச்எச்ஆர்ஏ501எக்ஸ் (NOKIA HHRA501x) மற்றும் நோக்கியா ஐஎஸ்540.1 (NOKIA IS540.1).

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்.. இவ்விரு மொபைல் போன்களுமே எண்ணெய் (Oil), இயற்கை எரிவாயு (Natural gas), சுரங்கம் (Mining) மற்றும் இரசாயனம் (Chemicals) போன்ற தொழில்துறை சூழல்களை தாக்குப்பிடிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன நோக்கியாவின் புதிய இண்டஸ்ட்ரியல் போன்கள் (Industrial Phones) ஆகும்.
நோக்கியா எச்எச்ஆர்ஏ501எக்ஸ் மற்றும் நோக்கியா ஐஎஸ்540.1 ஆகிய இரண்டு மாடல்களுமே, கடுமையான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளன (Suitability for use in Harsh conditions) என்பதை உறுதிப்படுத்தும் கடுமையான தரநிலைகள் (Strict standards) மற்றும் ஆயுள் சோதனைக்கு (Durability testing) உட்படுத்தப்பட்டுள்ளன.
நோக்கியாவின் இவ்விரு மொபைல் போன்களுமே ஏடெக்ஸ் ஸோன் 1 (ATEX Zone 1) என அழைக்கப்படும் வெடிப்பு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்படும் திறன் கொண்டவை. ஏடெக்ஸ் ஸோன் 1 (ATEX Zone 2) என குறிப்பிடப்படும் குறைந்த ஆபத்து உள்ள பகுதிகளிலும் கூட இவைகளை பயன்படுத்தலாம்
நோக்கியாவின் கூற்றுப்படி, இவ்விரு போன்களுமே தேவையான அனைத்து ஃப்ரெக்வெண்ஸி பேண்ட்ஸ் (All necessary frequency bands) மற்றும் தேவையான சான்றிதழ்களையும் (Required certificates) பெற்றுள்ளன. அதாவது நோக்கியா எச்எச்ஆர்ஏ501எக்ஸ் மற்றும் நோக்கியா ஐஎஸ்540.1 ஆகிய இரண்டு போன்களையும் உலகளாவிய நிறுவனங்கள் பயன்படுத்த போதுமான அனைத்தையும் தன்வசம் கொண்டுள்ளன.
அம்சங்களை பொறுத்தவரை. நோக்கியா ஐஎஸ்540.1 ஆனது கார்னிங் கொரில்லா 3 கிளாஸ் (Corning Gorilla 3 Glass) உடனான 6-இன்ச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 778 (Snapdragon 778) உடன் ஒப்பிடக்கூடிய செயல்திறனை வழங்கும் குவால்காம் எயிட் -கோர் QCM6490 ப்ராசஸரை கொண்டுள்ளது.
இந்த மொபைல் போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் 48எம்பி ஆட்டோஃபோகஸ் ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது நீண்ட பேட்டரி லைஃப்பை உறுதி செய்யும் 4400mAh பேட்டரியை பேக் செய்கிறது.
மறுகையில் உள்ள நோக்கியா எச்எச்ஆர்ஏ501எக்ஸ் மொபைல் போனின் அம்சங்கள் பகிரப்படவில்லை. இருப்பினும் இவ்விரு போன்களின் வடிவமைப்புமே கடுமையான சூழல்களுக்கு ஏற்றதாக இருக்கும். நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங் மற்றும் தீவிர வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் அதிர்ச்சியை தாங்கும் எம்ஐஎல்-810எச் ரேட்டிங்கை பெற்றுள்ளன.
பயனர்கள் கையுறைகளை அணிந்திருந்தாலும் கூட, இவ்விரு மொபைல் போன்களும் பயன்படுத்த ஏதுவானதாக இருக்கும். ஆகமொத்தம் நோக்கியாவின் இந்த 2 ரக்டு மொபைல் போன்களுமே தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் பிற தொழில்துறை அமைப்புகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருப்பது மட்டுமின்றி, நீடித்த மற்றும் நம்பகமானவை, தேய்மானமற்ற மொபைல் போன்களாகவும் இருக்கும்.
இந்த போன்கள் புஷ்-டு-டாக், புஷ்-டு-வீடியோ மற்றும் வணிகங்களுக்கு ஏதுவான பல முக்கியமான ஆப்களை ஆதரிப்பதால், தொழிலாளர்கள் இடையேயான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்த முடியும். இந்த மொபைல் போன்களின் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை தொடங்கும்? என்பது குறித்த எந்த தகவலையும் நோக்கியா இன்னும் பகிரவில்லை. அதுகுறித்த தகவல் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








