Home
Mobile

நோக்கியாவின் அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போன் நோக்கியா 5.3 தான்! விலை என்ன தெரியுமா?

நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் நோக்கியா நிறுவனம், நோக்கியா 5.3 ஐ அறிமுகப்படுத்தும் என்று அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்

நோக்கிய நிறுவனம் தனது பிரத்தியேக நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது என்ற செய்தியை தற்பொழுது வெளியிட்டுள்ளது. நோக்கியா நிறுவனம், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதோடு, கூடுதலாக இன்னும் சில ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன்

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனுடன் கூடுதலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மற்ற ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள் எதுவும் இன்னும் சரியாக வெளியிடப்படவில்லை. நோக்கியா 5.3 இந்த ஆண்டு தொடக்கத்தில் நோக்கியா 8.3 5ஜி போனுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் தோராயமாக ரூ. 15,080 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 5.3 விவரக்குறிப்புகள்

நோக்கியா 5.3 விவரக்குறிப்புகள்

  • 6.55' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • 2.5 D கர்வுடு கிளாஸ் உடன் கூடிய கார்னிங் கொரில்லா பாதுகாப்பு
  • அட்ரினோ 610 ஜி.பீ.யு
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • குவாட்-கேமரா அமைப்பு
    • குவாட்-கேமரா அமைப்பு
    • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 5 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமரா
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
    • கைரேகை ஸ்கேனர்
    • நிறம்
      • டூயல் 4 ஜி VoLTE
      • வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz)
      • புளூடூத் 4.2
      • ஜிபிஎஸ் + க்ளோனாஸ்
      • யூ.எஸ்.பி டைப்-சி
      • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
      • 4000 எம்ஏஎச் பேட்டரி
      • நிறம்: சியான், சேண்ட் மற்றும் சார்க்கோள் பிளாக்

Best Mobiles in India

English summary
Nokia Is Planning To Launch Nokia 5.3 And Couple Of Smartphones This Month In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X