Samsung, Redmi-லாம் ஷாக் ஆகுற விலையில்.. இந்தியாவில் அறிமுகமான NOKIA-வின் புதிய 5G போன்!

|

சாம்சங் மற்றும் ரெட்மி போன்ற நிறுவனங்கள் எல்லாம் ஷாக் ஆகும் அளவிற்கு, நோக்கியா (NOKIA) நிறுவனம் ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனை (5G phone) அறிமுகம் செய்துள்ளது என்றதுமே..

நீண்ட நாட்கள் கழித்து.. ஒரு தரமான கம்பேக்-ஐ கொடுக்கும் அளவிலான ஒரு ஸ்மார்ட்போனை, நோக்கியா அறிமுகம் செய்துவிட்டது என்று நினைத்து விட வேண்டாம்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

சாம்சங், ரெட்மி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, லாவா (Lava) போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் கூட நோக்கியாவின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை பார்த்து.. "அண்ணே! என்ன ணே பண்ணி வச்சி இருக்கீங்க" என்று ஷாக் ஆகி இருக்கலாம்!

அதென்ன ஸ்மார்ட்போன்? ஷாக் ஆகும் அளவிற்கு அது அப்படி என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!

சரியான நேரத்துல.. தப்பான ஒரு போன்!

சரியான நேரத்துல.. தப்பான ஒரு போன்!

நாம் இங்கே பேசுவது நேற்று (அதாவது நவம்பர் 1 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகமான நோக்கியா ஜி60 5ஜி (NOKIA G60 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான்!

நோக்கியாவின் இந்த ஸ்மார்ட்போனை "சரியான நேரத்தில் அறிமுகமான ஒரு தவறான 5ஜி ஸ்மார்ட்போன்" என்றே கூறலாம்.

ஏனென்றால் ஒட்டுமொத்த இந்தியர்களும் ரூ.12,000 க்குள் வாங்க கிடைக்கும் 5ஜி போன்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலைப்பாட்டில், நோக்கியா அதன் ஜி60 மாடலை "கொஞ்சம் ஓவரான" விலைக்கு அறிமுகம் செய்து இருக்க கூடாது தான்!

அப்படி என்ன விலைக்கு அறிமுகம் செய்துள்ளது?

அப்படி என்ன விலைக்கு அறிமுகம் செய்துள்ளது?

நம்பினால் நம்புங்கள்! நோக்கியா அதன் G60 5G மாடலை ரூ.29,999 க்கு அறிமுகம் செய்துள்ளது.

ரூ.20,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களையே மக்கள் புறக்கணித்து வரும் நிலைப்பாட்டில், நோக்கியா நிறுவனம் ரூ.30,000 பட்ஜெட்டின் கீழ் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருப்பது.. எந்த மாதிரியான வியாபார தந்திரமாக இருக்கும் என்று எங்களுக்கு புரியவில்லை. ஒருவேளை உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள்!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

ரூ.30,000 க்கு அப்படி என்ன அம்சங்களை பேக் செய்கிறது.

ரூ.30,000 க்கு அப்படி என்ன அம்சங்களை பேக் செய்கிறது.

இந்தியாவில், வருகிற நவம்பர் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 695 5ஜி SoC-ஐ பேக் செய்கிறது.

இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் உடனான 6.58-இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

நோக்கியாவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமராக்களை பேக் செய்கிறது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா (f/1.8) + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா (f/2.2) + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் (f/2.4) உள்ளது.

முன்பக்கத்தில், சிங்கிள் 8 மெகாபிக்சல் செல்பீ (f/2.0) கேமரா உள்ளது. இதன் கேமரா அமைப்பில், நைட் மோட் 2.0, டார்க் விஷன் மற்றும் AI போர்ட்ரெய்ட் போன்ற அம்சங்கள் உள்ளன!

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

பேட்டரி கேப்பாசிட்டி என்ன?

பேட்டரி கேப்பாசிட்டி என்ன?

நோக்கியா G60 5G ஆனது 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 190 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது IP52 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.

ஜியோ 5ஜிக்கான ஆதரவை வழங்கும்!

ஜியோ 5ஜிக்கான ஆதரவை வழங்கும்!

டூயல் சிம் (நானோ) ஆதரவை வழங்கும் இந்த 5G ஸ்மார்ட்போன் ஆனது eSIM ஆதரவையும் வழங்குகிறது.

மேலும் இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் 5G NSA கட்டமைப்பை பயன்படுத்துகிறது.

உடன் நோக்கியா G60 5G ஆனது ஜியோவின் True 5G உடன் பொருந்தக்கூடிய 5G SA தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

மூன்று ஆண்டுகள் வரை..!

மூன்று ஆண்டுகள் வரை..!

டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் v5.1 மற்றும் NFC போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்கும் ஜி60 ஆனது யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜாக்கையும் கொண்டுள்ளது!

கடைசியாக, இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் மூன்று ஓஎஸ் அப்டேட்களை பெறும் மற்றும் அடுத்த மூன்று ஆண்டுகள் வரையிலாக மாதாந்திர ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும்!

Photo Courtesy: NOKIA

Best Mobiles in India

English summary
Nokia is overconfident Indians looking for budget 5g mobile but it launched 5g phone for rs 30000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X